கோடையில் ரசிகர்களுக்கு அருள் பாலிக்க வருகிறாள் மூக்குத்தி அம்மன்!

By Staff

சென்னை: அதற்குள் தனது இரண்டாவது படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டார் ஆர்ஜே பாலாஜி.

தான் முதன் முதலில் நடித்து அறிமுகமான எல்.கே.ஜி படத்திற்கு பிறகு பாலாஜி அறிவித்தது தனது இரண்டாவது படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் இப்படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை சரவணன் என்ற மற்றுமொரு இயக்குனர் பாலாஜி உடன் இணைந்து இயக்குகிறார்.

RJ Balajis Mookuthi Amman Shooting Wrapped

படத்தில் பாலாஜி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர் படத்தை கடந்த வருடத்தில் பல படங்களை தயாரித்து வெற்றி பெற்ற வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் பழம்பெரும் நடிகர் மெளலி மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் நடித்த அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து இப்படமும் இவருக்கு வெற்றியை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது. ஆர்ஜே பாலாஜி படம் என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது ஆகையால் இப்படத்தை குடும்பத்துடன் சென்று கண்டுகளிக்கும் ஒரு நல்ல காமெடி திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா இப்படத்தில் ஒரு கேஸ்ட் ஆப்பியரன்ஸ்ல் நடிக்கிறார். கடந்த சில தினங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்து விட்டதாகவும் தகவல்
வருகின்றன.

ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ரசிகர்களுக்கு முக்கியமாக ஒரு செய்தியை பகிர்ந்துள்ளர் அது என்னவென்றால் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X