ஊர்வசி கர்ப்பம்... ஆர்ஜே பாலாஜி வீட்ல விஷேசமாம்... நாம தயாராகலாமா?

சென்னை : நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்ஜே பாலாஜியின் உருவாக்கத்தில் அடுத்தப்படம் தயாராகி வருகிறது. படத்தின் சூட்டிங்கை கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே கட்டமாக முடித்துவிட்டு வந்துள்ளது படக்குழு போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி

தொலைக்காட்சியிலிருந்து பல பிரபலங்கள் பெரிய திரையில் சாதித்து வருகின்றனர். ஆனால் ரேடியோ ஜாக்கியாக இருந்து பெரியத் திரைக்கு வந்துள்ள மற்றொரு நம்பிக்கை வரவு ஆர்ஜே பாலாஜி. மற்றவர்களை போல நடிப்பில் முதலில் கவனம் செலுத்திவிட்டு பின்பு இயக்கம், தயாரிப்பு என வலம் வரலாம் என்று காத்திருக்கவில்லை ஆர்ஜே பாலாஜி.

நடிப்பு + இயக்கம்

நடிப்பு + இயக்கம்

நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி, தேவி உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்த இவர் நேரடியாக LKG மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். இந்தப் படங்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை இவருக்கு தந்தன. தன்னுடைய படங்களில் அரசியலை புகுத்தி அனைவரையும் யோசிக்க வைத்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி.

பாலாஜியின் வீட்ல விசேஷம்

பாலாஜியின் வீட்ல விசேஷம்

இந்நிலையில் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை இவர் மேற்கொண்டுள்ளார். வீட்ல விசேஷம் என்று இந்தப் படத்திற்கு பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். வலிமை படத்திற்கு பிறகு இந்தப் படத்தை பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்தி படத்தின் ரீமேக்

இந்தி படத்தின் ரீமேக்

பாலிவுட்டில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த பதாய் கோ என்ற திரைப்படத்தை தற்போது பாலாஜி ரீமேக் செய்துள்ளார். ஆனாலும் தன்னுடைய ஸ்டைலில்தான் இந்தப் படத்தை எடுத்துள்ளார். கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஒரேகட்டமாக 40 நாட்கள் சூட்டிங்கை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளது படக்குழு.

பர்ஸ்ட் லுக் வெளியீடு

பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து சரவணன் என்பவரும் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சூரரைப் போற்று நாயகி அபர்ணா பாலமுரளி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்திற்கு தற்போது வீட்ல விசேஷம் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஊர்வசிக்கு வளைகாப்பு

ஊர்வசிக்கு வளைகாப்பு

படத்தில் சத்யராஜ், ஊர்வசி முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். யோகி பாபுவும் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் படம் ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஊர்வசிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடப்பது போல காணப்படுகிறது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X