ஆர்ஜே பாலாஜி சொன்ன ஸ்பெஷல் நியூஸ்.. எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போல இருக்குமா? ரசிகர்கள் ஆர்வம்!

சென்னை : ஆர் ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படம் குறித்த மிரட்டலான தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

RJ Balaji’s next is ready, First Look and Title of the film to be unveiled tomorrow.

வானொலியில் தொகுப்பாளராக இருந்த ஆர் ஜே பாலாஜி தனது தனித்துவமான பேச்சால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். வானொலியில் இவரின் பேச்சை கேட்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு. ரேடியோவில் கிடைத்த வரவேற்பை அடுத்து வெள்ளித்திரையில் காமெடியான நகைச்சுவை விருந்து படைத்தார். காமெடியனாக அறிமுகமாகி இப்பொழுது இயக்குனராக உருவெடுத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி.

RJ Balaji’s next is ready, First Look and Title of the film to be unveiled tomorrow.

கடந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டாரை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது. இப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார், காமெடி, மூடநம்பிக்கை, கிடைத்த வாழ்க்கையை அழகாக நேசித்து வாழவேண்டும் என பல கருத்துக்கள் படத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஆர் ஜே பாலாஜி இப்போது போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில். ஆர் ஜே பாலாஜி, தனது திரைப்படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு ஆயுஷ்மன் குரானா நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற, பதாய் ஹோ இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இத்திரைப்படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்திருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று அபர்ணா பாலமுரளி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு வீட்ல விசேஷங்க என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், இந்த தலைப்பை ஏற்கனவே பாக்யராஜ் தனது படத்திற்கு வைத்துள்ளதால் அவரிடம் அனுமதி கேட்டதாகவும் கூறப்படுகிறது. நாளை டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் போதுதான் படத்திற்கு என்ன தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை போல இந்த படமும் மாஸாக இருக்குமா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X