Veetla Vishesham Box Office: ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம் நல்ல ஓப்பனிங்கை பாக்ஸ் ஆபிஸில் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முதல் வாரம் நல்ல கலெக்‌ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்யராஜ், ஊர்வசி, ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஷிவானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிட்டிவ் விமர்சனம்

பாசிட்டிவ் விமர்சனம்

ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்களை போலவே வீட்ல விசேஷம் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெட்டுக் குத்து, தோட்டாக்கள் தெறிக்க வெறித்தனமான படங்களை பார்த்து சளித்துப் போன ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் நல்ல ஆறுதல் ஆக இருக்கும் என கூறுகின்றனர். ஆர்ஜே பாலாஜி இயக்குநராகவும் ஹீரோவாகவும் அசத்தி உள்ளார்.

ஆர்ஜே பாலாஜி ஹேப்பி

ஆர்ஜே பாலாஜி ஹேப்பி

வீட்ல விசேஷம் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்த ஆர்ஜே பாலாஜி நேற்றே வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்து இருந்தார். மேலும், ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். சத்யராஜ், ஊர்வசியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது ரசிகர்களை தியேட்டரை நோக்கி அழைத்துச் செல்கிறது.

எவ்வளவு பட்ஜெட்

எவ்வளவு பட்ஜெட்

முதல் பாதி இருந்த அளவுக்கு படத்தின் இரண்டாம் பாதியில் புரொடக்‌ஷன் வேல்யூ ரொம்பவே குறைவு என்பது படத்தை பார்த்தாலே தெரிகிறது. ஒட்டுமொத்தமாக 10 முதல் 15 கோடி ரூபாயில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி என தொடர்ந்து தமிழில் பல படங்களை தயாரித்து வருகிறார் போனி கபூர்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

கமல்ஹாசனின் விக்ரம் படம் இன்னமும் தியேட்டர்களை ஆட்சி செய்து வரும் நிலையில், ஆர்ஜே பாலாஜியின் புதிய படமான வீட்ல விசேஷம் படம் 250க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாகவே படத்தின் முதல் நாள் வசூல் 1.1 கோடி என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் கணித்துள்ளனர். ஆர்ஜே பாலாஜிக்கு தியேட்டரில் இது நல்ல ஓப்பனிங் வசூல் எனக் கூறுகின்றனர்.

வசூல் அதிகரிக்கும்

வசூல் அதிகரிக்கும்

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்ல விசேஷம் படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் மேலும், அதிகரித்து இருப்பதாகவும், வெளியிட்ட இடங்களில் எல்லாம் டிக்கெட்டுகள் 80 சதவீதம் புக் ஆகி வருவதாக கூறுகின்றனர். முதல் வார முடிவில் 3 முதல் 4 கோடி வசூலை இந்த படம் வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X