ஓடிடியில் வெளியான ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம்.. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்!

சென்னை : நடிகரும் பிரபல இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது வீட்ல விசேஷம்.

Recommended Video

K. S. Ravikumar | நடிப்பதை விட Direction தான் ரொம்ப கஷ்டம் | Koogle Kuttappan Aha Ott Launch

சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியானது.

இந்தியில் சூப்பர் ஹிட்டடித்த பதாய் ஹோ என்ற படத்தை தமிழ் ரசிகர்களுக்காக மாற்றித் ரீமேக் செய்திருந்தார் ஆர் ஜே பாலாஜி.

பன்முதத் திறமை

பன்முதத் திறமை

வீடியோ ஜாக்கி, ஸ்போர்ட்ஸ் விமர்சகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் ஆர் ஜே பாலாஜி. தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனை போன்றவற்றில் கலக்கிவரும் இவர் எல்கேஜி, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது வீட்ல விசேஷம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

திரையரங்குகளில் ரிலீஸ்

திரையரங்குகளில் ரிலீஸ்

இந்தப் படம் கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, புகழ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். திருமண வயதில் மகன் இருக்கும் நிலையில், ஒரு தாய் கர்ப்பமானால் அந்த குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் பேசியது.

இந்திப்படத்தின் ரீமேக்

இந்திப்படத்தின் ரீமேக்

பதாய் ஹோ என்ற இந்தி படத்தை ரீமேக் செய்து இந்தப் படம் உருவாகியிருந்தது. படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்தை கடந்த நிலையில் தற்போது ஜீ5 தமிழ் சேனலில் இன்று முதல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை பேமிலி ஆடியன்ஸ் அதிகமாக பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான பிரமோஷன்

இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கும் சிறப்பான பிரமோஷனை ஆர்ஜே பாலாஜி கொடுத்திருந்தார். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அவர் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும் ஜீ தமிழ் சேனலின் பிரபல தொடர்களின் நடிகர், நடிகைகளும் இந்தப் படத்தை பிரமோட் செய்யும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

படத்தை பிரமோட் செய்த தேவயானி

படத்தின் சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டவர்களின் காட்சிகள் முக்கியமான ப்ரமோக்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. நடிகை தேவயாணி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்திற்கு சிறப்பான பிரமோஷனை கொடுத்துள்ளனர். அவர்களின் வீடியோக்களையும் ஜீ5 தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வித்தியாமான பிரமோஷன்கள்

வித்தியாமான பிரமோஷன்கள்

முன்னதாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பும் பல வித்தியாசமான கோணங்களில் படத்தை பிரமோட் செய்திருந்தார் ஆர்ஜே பாலாஜி. குறிப்பாக தேவயாணியின் புதுப்புது அர்த்தங்கள் சீரியலுடன் இணைந்து புதுமையான வகையில் பிரமோஷன் அளிக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X