Don't Miss!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
ஊரே சிரிக்கிது.. ஊரே சிரிக்கிது அப்பப்பா.. ‘வீட்ல விசேஷங்க‘ டிரைலர் ரிலீஸ் !
சென்னை : வீட்ல விசேஷங்க படத்தின் டிரைலர் படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடி கலாட்டாவாக உள்ள அந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
இப்படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் யோகி பாபு கௌரவத்தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி
வானொலியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபரலமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இதையடுத்து, பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், எல்.கே.ஜி, படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
வீட்ல விசேஷங்க
தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வீட்ல விசேஷங்க என்கிற படம் தயாராகி உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்தும் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜூன் மாதம் 17-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

டிரைலர்
இந்நிலையில், வீட்ல விசேஷங்க திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஆர்.ஜே. பாலாஜிக்கே உரிய ஸ்டைலில் கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளதை இந்த டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். இதனால், ஆர்.ஜே.பாலாஜியை பார்த்து ஊரே ஒன்று கூடி சிரிக்கிறது. ஒரு வித்தியாசமான காமெடி திரைப்படமாக, இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதாய் ஹோ
2018ம் ஆண்டு வெளியான 'பதாய் ஹோ' திரைப்படத்தின் ரீமேக் தான் வீட்ல விசேஷங்க. இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா லீட் ரோலில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை அமிர் ரவீந்தரநாத் சர்மா இயக்கி இருந்தார். இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது மட்டும் இல்லாமல் தேசிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.