விஜய் CM ஆனதும்.. சரவெடியாக நான் அதைச் செய்யறேன்.. RJ பாலாஜி உற்சாக வீடியோ!
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது எங்கு சென்று யாரிடத்தில் பேச்சு கொடுத்தாலும் 10 நிமிடங்களுக்குள் விஜய் முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார்? ஏன் இந்த ஆளுநர் இந்த விஷயத்தை போட்டு ஜவ்வு மாதிரி இழுதுக் கொண்டு இருக்கிறார்? பெரும்பான்மையை சட்டமன்றத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தி நிரூபித்தால் போதும் தானே? அப்படி இருக்கையில் விஜய்யை முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்துவிட்டு அடுத்த கட்ட வேலையை பார்க்கலாம் அல்லவா என்று கேட்டு விடுவார்கள். அந்த அளவுக்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இப்படி இருக்கையில் நடிகரும் இயக்குநருமான RJ பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " கருப்பு படம் அடுத்த வாரத்தில் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிரைலர் செம்மையாக தயாராகிவிட்டது. நாங்களும் டிரைலரை ரிலீஸ் செய்ய ஆவலாக இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் இன்னும் பரபரப்பாகவே இயங்கி வருகிறது.
அப்படி இருக்கையில் இந்த நேரத்தில் கருப்பு படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்காது. எனவே இந்த பரபரப்பு எல்லாம் கொஞ்சம் அடங்கட்டும் என்று காத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த பரபரப்பு எல்லாம் கொஞ்சம் குறைந்து எல்லாம் இயல்பு நிலைக்கு மாறினால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் களமிறங்கி விடலாம்" என்று பேசி உள்ளார்.

அவரது இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அப்படி என்றால் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் தான் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்வேன் என்று கூறுங்கள் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் அந்த வீடியோவில், நல்லா வெறப்பா நீளமான டிரைலர் தான் ரிலீஸ் செய்யப் போகிறோம், கருப்பன் கூட இருக்கிறான், கூட வருவான் என்றும் தெரிவித்துள்ளார். படம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் பலரும் டிரைலருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா, RJ பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


Click it and Unblock the Notifications