கருப்பன் எல்லாத்தடையும் அடிச்சு உடைப்பான்.. காணாமல் போன தியேட்டர்கள்.. ஆர்ஜே பாலாஜி கடைசி நேர ட்வீட்!

சென்னை: சூர்யாவின் கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மதுரையில் ஆடியோ லான்ச் தொடங்கி ஹைதராபாத், கேரளாவில் எல்லாம் புரமோஷன் நடைபெற்றது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்துக்கு நிதி பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கருப்பு படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகாது எனக் கூறுகின்றனர்.

மாயாஜால், பிவிஆர், ரோகிணி என தமிழ்நாட்டில் உள்ள பல தியேட்டர்கள் கருப்பு படத்தின் டிக்கெட் புக்கிங் சைட்டில் இருந்து காணாமல் போனதும் ரசிகர்கள் ஷாக் ஆகி ஆர்.ஜே. பாலாஜியிடம் கேள்விகளை எழுப்பினர்.

RJ Balaji says he don t have concrete answer for Karuppu movie release without postponed
Photo Credit:

இந்நிலையில், கருப்பு படத்தின் பிரச்னை குறித்து தன்னிடம் கான்கிரேட்டான பதில் ஏதுமில்லை என்றும் ஆனால், கண்டிப்பாக கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான் என பதிவிட்டுள்ளார்.

கருப்பு ரிலீஸ் கஷ்டம் தான்: சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மே 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கருப்பு திரைப்படம் நாளை வேளியாகாது என்றே தெரிகிறது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக பல தியேட்டர்களில் இருந்து கருப்பு படத்தின் டிக்கெட் புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜே பாலாஜி நம்பிக்கை: "அன்பான ரசிகர்களே, தற்போதைய சூழ்நிலைக்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை. தயாரிப்பாளர்கள் இந்த தடைகளை சமாளிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே பல தடைகளை சந்தித்துள்ளது. ஆனால் எப்படியோ கடவுள் எங்களை அவற்றை எல்லாம் கடக்கச் செய்து, இன்று 32 மாதங்களுக்குப் பிறகும் இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இந்த முறையும் அவர்மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, முழுமையான நம்பிக்கை உள்ளது.

கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான். #Karuppu நாளைக்கு காலைல செமயா release ஆகும்..!!! நம்பிக்கை வைங்க, நடக்கும்...!!!" என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X