அந்த கடவுள்தான்..அம்மன் நயன்தாராவை அப்படி விமர்சித்த ரசிகருக்கு ஆர்ஜே.பாலாஜி இப்படி கொடுத்த பதிலடி!
சென்னை: 'மூக்குத்தி அம்மன்' நயன்தாராவை விமர்சித்த ரசிகருக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
காமெடி வேடங்களில் நடித்துவந்த ஆர்.ஜே.பாலாஜி, 'எல்கேஜி' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், நாஞ்சித் சம்பத், ஜே.கே.ரித்திஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படம், மூக்குத்தி அம்மன். இதை என்ஜே.சரவண னுடன் இணைந்து அவரும் இயக்குகிறார்.

கன்னியாகுமரி
இதில், நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். மவுலி, ஊர்வசி, மேயாத மான் இந்துஜா உட்பட பலர் நடிக்கின்றனர். வேல்ஸ், ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது.

நயன்தாரா விரதம்
படத்துக்காக, நயன்தாரா விரதம் இருந்து நடித்தார். அவரது அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார். 'அம்மன் கேரக்டரில் நடிப்பதற்காக, முழு உழைப்பையும் கொடுத்து இருக்கிறார் நயன்தாரா. இது, அவர் சினிமா வாழ்வில், முக்கியமான படமாக இருக்கும்' என்றும் கூறியிருந்தார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி டிரெண்டானது.

சாமி படம்
அம்மன் தோற்றத்தில் இருக்கும் நயன்தாராவின் லுக்கை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அதற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், இது நூறு சதவிகித சாமி படம்தான் என்று தெரிவித்து இருந்தார் பாலாஜி. அவர் கூறும்போது, இது நையாண்டி படம் அல்ல. நாம் சின்ன வயதில் பார்த்த, சாமி படங்களின் அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும்' என்று தெரிவித்தார்.
அமையாது, அமைச்சுக்கணும்
இந்நிலையில், ட்விட்டரில் பாராட்டுத் தெரிவித்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாலாஜி. சில ரசிகர்கள் கிண்டலாக அவரை கலாய்த்திருந்தனர். ஒரு ரசிகர், வாழ்க்கைன்னு அமைஞ்சா, ஆர்.ஜே.பாலாஜி போல அமையணும் என்று கூறியிருந்தார். அவருக்குப் பதிலளித்துள்ள பாலாஜி, அமையாது, அமைச்சுக்கணும் என்று பதில் தெரிவித்துள்ளார்.
கடவுள் தான்
மற்றொருவர், 'யார் அம்மன் வேடம் போடணும்ங்கற கூறுபாடு இல்லாம போச்சு' என்று கிண்டல் அடித்திருந்தார். அவருக்கு அதிரடியாக பதிலளித்த பாலாஜி, 'உங்க பேர்ல இருக்கற கடவுள் தான் உங்களுக்கு நல்ல புத்திய கொடுக்கணும்' என்றார். இந்த டைமிங் கமென்ட்டை ஏராளமானோர் வரவேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











