Just In
- 6 hrs ago
சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!
- 7 hrs ago
விஜய் டிவி புகழ் திவாகருக்கு… டும் டும் டும்.. அபியை மணந்தார்!
- 7 hrs ago
புதிய முயற்சியை ஆதரித்ததால்தான்… நான் இயக்குனரானேன்.. கார்த்திக் சுப்புராஜ்
- 7 hrs ago
கையில் சரக்குடன் ஃபிரன்டை கட்டிப்பிடித்த நடிகை மாளவிகா.. தீயாய் பரவும் போட்டோ!
Don't Miss!
- News
புதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
- Finance
அமூல் பால் விலை ஏற்றம்..!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Technology
பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Lifestyle
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பப்பி : கிச்சனே இல்லாம வீடு கட்டுவேண்டி... ஆர்ஜே பாலாஜி பாடிய பாடல்
சென்னை: சாப்பாடுதான் பிரதான பிரச்சினை... சம்பாதிப்பதே சாப்பிடத்தான். ருசியான சாப்பாட்டிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் சிலர் செலவு செய்வார்கள். வேலைக்கு போகும் தம்பதியர் பெரும்பாலானோர் ஹோட்டல் உணவு விரும்புகின்றனர். அவர்களுக்காகவே சோத்துமூட்டை பாடலை பாடியுள்ளார் ஆர்ஜே பாலாஜி.
பப்பி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலையும் வெளியிட்டுள்ளனர். சோத்துமூட்டை என்று பெயரிடப்பட்ட இந்த பாடல் உணவுப்பொருட்கள் மற்றும் ஹோட்டல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இந்த பாடலை ஆர்.ஜே.விஜய் எழுத, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பாடியுள்ளார். இந்த பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஜசரி கே.கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் வருண் கமல் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் நட்டி தேவ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் யோகி பாபு நடித்த காட்சிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகவும், இளைஞர்களின் மனதில் வக்கிர எண்ணங்களை தூண்டுவதாகவும் கூறி சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தப் போராட்டம் பப்பி திரைப்படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.
பப்பி திரைப்படத்திற்கு தரன்குமார் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு பணியையும் ரிச்சர்ட் எடிட்டிங் பணியையும் மேற்கொள்கின்றனர். இதற்கு முன்பு இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடலான அஞ்சி மணிக்கு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், பப்பி படக்குழுவினர், படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலையும் வெளியிட்டுள்ளனர். சோத்துமூட்டை என்று பெயரிடப்பட்ட இந்த பாடல் உணவுப்பொருட்கள் மற்றும் ஹோட்டல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இந்த பாடலை ஆர்.ஜே.விஜய் எழுதியுள்ளார். இப்பாடலை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பாடியுள்ளார்.
இந்தப் பாடலையும் வைரலாக்க வேண்டும் என்றும் சர்ச்கையாக்க வேண்டும் என்றும் ஆர்.ஜே.பாலாஜி விரும்பி கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இந்த பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதற்கு முன்பு, பிரகாஷ் ராஜ் மற்றும் சினேகா நடித்த உன் சமையல் அறையில் திரைப்படத்தில் இந்த பொறப்பு தான் என்ற பாடலும் உணவை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல். இந்த பாட்டுக்காகவே படம் பாத்தவர்கள் பலர் உண்டு. அது போல சோத்துமூட்டை பாடலும் அமைய பப்பி திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.