வாக்களிப்பது கடமை அல்ல அது ஒரு சமூக பொறுப்பு.. குட்டி கதை சொன்ன ஆர் ஜே பாலாஜி!
சென்னை : மூக்குத்தி அம்மன் வெற்றியை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி தற்போது அடுத்த திரைப்படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் இதில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
நடிகராகவும் இயக்குனராகவும் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் இருக்கும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.
சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கும் வகையிலும் இவரது பேச்சுக்கள் இருக்க இளம் ரசிகர்களால் அதிக அளவில் கவனிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி தேர்தல் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வயது வித்தியாசம் பார்க்காமல்
வானொலியில் குதர்க்கமாக லூஸ் டாக் பேசி பிரபலமடைந்த ஆர் ஜே பாலாஜியின் நிகழ்ச்சியை கேட்பதற்காகவே ரசிகர்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் இருக்க இப்பொழுது திரைப்படங்களிலும் நடிகராகவும் காமெடியிலும் கலக்கி கொண்டுள்ளார்.

தனித்தன்மையான கவுண்டர்கள்
தீயா வேலை செய்யணும் குமாரு, தானா சேர்ந்த கூட்டம், இவன் தந்திரன், பூமராங்,நானும் ரவுடி தான் என பல படங்களில் தனது தனித்தன்மையான கவுண்டர்கள் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ள ஆர் ஜே பாலாஜி இப்பொழுது இயக்குனராகவும் வெற்றி வலம் வருகிறார்.
Recommended Video

முக்கிய வேடத்தில்
எல்கேஜி வெற்றியை தொடர்ந்து இயக்கி நடித்திருந்த மூக்குத்தி அம்மன் சென்ற தீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது இதில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து இருக்க படம் பட்டைய கிளப்பி மிகச் சிறந்த காமெடி திரைப்படமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது.

குட்டி கதை
இவ்வாறு திரைப்படங்களின் வாயிலாக அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஆர் ஜே பாலாஜி பல இக்கட்டான சூழ்நிலைகளில் சமூக ஆர்வலராகவும் களத்தில் இறங்கி பணியாற்றி இருக்க தற்பொழுது தமிழகத்தில் நடக்கும் தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் வாக்களிப்பது கடமை அல்ல அது ஒரு சமூக பொறுப்பு எனக் கூறியதோடு ஒரு குட்டி கதை ஒன்றையும் சொல்லி வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை கூறியிருக்கும் வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











