twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

    டிவிட்டரில் புதிய கொடி படத்தை வைத்த ஆர்.ஜே.பாலாஜியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    |

    சென்னை: ஆர்.ஜே.பாலாஜியின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த தகவலுக்கு ஆதரவு ஒருபக்கம் பெருகி வரும் சூழலில், டிவிட்டரில் எதிர்ப்பும், கலாய்ப்புகளும் பரவலாக காணப்படுகிறது.

    தமிழில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவரான ஆர்.ஜே.பாலாஜி, அவ்வப்போது சமூகப்பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வருபவர். எனவே, இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் உள்ளது.

    இந்நிலையில், விரைவில் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் குதிக்க இருப்பதாக சென்னையில் ஆங்காங்கே சுவர் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஏதும் மறுப்பு சொல்லாத ஆர்.ஜே.பாலாஜி, இன்று தனது டிவிட்டர் பக்க புரொபைல் போட்டோவாக, சுவர் ஓவியத்தில் இருந்த கொடியை மாற்றியுள்ளார்.

    இதனால், அந்த சுவர் ஓவியத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல், வரும் 18ம் தேதி அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஒருபுறம் உள்ளது. மற்றொரு புறமோ வழக்கம்போல் புதிய படத்திற்காக படக்குழுவினர் செய்யும் வித்தியாசமான பரபரப்பு விளம்பரம் இது என்ற பேச்சும் உள்ளது.

    எது எப்படியோ ஆர்.ஜே.பாலாஜியின் இந்த கொடி படத்திற்கு டிவிட்டரில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்த கலவையான விமர்சனங்கள் வலம் வருகின்றன. இதோ அவற்றில் சில...

    சப்போர்ட் மீ:

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய கட்சி தொடங்கலாம் என்றால், நானும் புதிய கட்சி தொடங்கப் போகிறேன். சப்போர்ட் மீ என்கிறார் இவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியால் சர்ச்சைகளில் சிக்கிய ஜூலியும் புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருப்பதை இவர் இப்படிக் கூறுகிறார்.

    ஃபன்னி கை:

    சவுத் ஆப்ரிக்கா கொடில இவன் எதுக்கு மாட்டை வரைஞ்சிருக்கான். பன்னி கை' என தெரிவித்துள்ளார் இவர். ஆனால், இது கென்யா நாட்டுக் கொடி என மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

    அப்போ பிரதமர்:

    முதலில் ஆர்.ஜே., வருங்காலத்தில் முதலமைச்சர் என ஆர்.ஜே.பாலாஜிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார் இவர். இதற்கு பதில் பதிவு வெளியிட்டுள்ள சிலர் பிரதமர், அமெரிக்க அதிபர் போன்ற பதவிகள் எல்லாம் வேண்டாமா எனக் கலாய்த்துள்ளனர்.

    உன் பக்கம் தான்:

    தலைவா நாளைய தமிழகமே உன் பக்கம். இளைஞர் உன் பக்கம். பட்டையக் கிளப்புவோம் வா எனத் தெரிவித்துள்ளார் இவர்.

     இப்பிடி பண்றீங்களேம்மா:

    இப்பிடி பண்றீங்களேம்மா:

    இப்படியாக ஆர்.ஜே.பாலாஜிக்கு ஆதரவாகவும், எதிராகவும் டிவிட்கள் பறந்து கொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, இந்த கட்சித் தொடங்கப்போவதாக வெளியான தகவல் அவரது அடுத்த படத்திற்கான விளம்பரம் என்கின்றனர் சிலர். சரி, இதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என போன் பண்ணினால், ஆர்.ஜே.பாலாஜியின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    In social networks actor RJ Balaji has been trolled by the netizens.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X