Karuppu: கருப்பா காப்பாத்தீட்டப்பா.. தியேட்டரில் கருப்பனாகவே மாறிய RJ பாலாஜி.. வெறியாகிட்டாரு போலயே

சென்னை: சூர்யா, த்ரிஷா, இந்தரன்ஸ், அஹானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கருப்பு. படம் மே 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் படம் வெளியாகவில்லை. இப்படி இருக்கையில் படம் மே 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப் படமாக மாறி உள்ளது. இப்படி இருக்கையில் படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே, தியேட்டரில் பால்கனியில் இருந்து கொண்டு மிகவும் ஆக்ரோஷமாக கத்துகிறார் RJ பாலாஜி. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

RJ பாலாஜி எழுதி, திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார். இது மட்டும் இல்லாமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பைப் பெற்றுள்ளது. சூர்யாவுக்கு மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் தியேட்டரில் ஒரு வெற்றிப் படம் என்று பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

RJ Balaji Turns Into Karuppan at Theatre Celebration as Suriya Fans Roar for Karuppu Success

எமோஷனல் நன்றிகள்: குறிப்பாக இயக்குநர் RJ பாலாஜியை பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள். அதுவும், ரொம்ப நன்றிகள் RJ பாலாஜி அண்ணா என்று எல்லாம் பாராட்டி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் யாரு சாமி நீ, எங்க இருந்த இத்தனை நாளா? எங்க அண்ணனை தூக்கி உச்சத்தில் உட்கார வெச்சுட்டியே என்று எல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.

RJ Balaji Turns Into Karuppan at Theatre Celebration as Suriya Fans Roar for Karuppu Success

கருப்பனாகவே மாறிய ஆர்ஜே பாலாஜி: இப்படி இருக்கையில் படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் RJ பாலாஜி சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்த்தார். படம் வெளியாகவில்லை என்று மே 14ஆம் தேதி அழுது பேசி மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டார். ஆனால் மே 15ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டதால், தனது மூன்றாண்டு கால உழைப்பு வீணாகப் போகவில்லை தான் வென்றுவிட்டேன், எனது படம் வென்று விட்டது, எங்களது மொத்த குழுவின் உழைப்பும் வெற்றி பெற்று விட்டது என்பதை வெளிப்படுத்துவது போல தியேட்டரின் பால்கனியில் நின்று கொண்டு கத்தினார். கிட்டத்தட்ட தியேட்டரில் சவுண்ட் எதுவும் இல்லை என்றால் தியேட்டரே அதிரும் அளவுக்கு கத்தி இருப்பார் என்று கூறலாம். அதைப் பார்க்கையில் அந்த கருப்பனே வந்து இறங்கிட்டான் போலயேப்பா என்று கூறும் அளவுக்கு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X