ஆர்.ஜே. பாலாஜி vs அதிமுக ஐடி பிரிவு செருப்பு சண்டை: சிம்புவை வேற வம்பு...
Recommended Video

சென்னை: ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. பட போஸ்டரை பார்த்துவிட்டு அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி ஒருவர் செருப்பு அபிஷேகம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள எல்.கே.ஜி. படத்தின் போஸ்டர் ஒன்று நேற்று மாலை வெளியானது. அந்த போஸ்டரை பார்த்ததுமே தெரிந்துவிட்டது முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படத்தை கலாய்த்துள்ளனர் என்று.
போஸ்டரை பார்த்த அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி ஒருவர் ஆர்.ஜே. பாலாஜியை விளாசியுள்ளார்.
செருப்பு அபிஷேகம்
எல்.கே.ஜி. ரிலீஸானால் பாலாஜியின் கட்அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பண்ணப் போவதாக அதிமுக நிர்வாகி பிரவீன் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அண்டா
அதிமுக நிர்வாகியன் ட்வீட்டை பார்த்த ஆர்.ஜே. பாலாஜி இலவச விளம்பரம் கிடைக்கத் துவங்கிவிட்டது என்ற குஷியில் அண்டா அண்டாவாக செருப்பு அபிஷேகம் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

சிம்பு
ஆர்.ஜே. பாலாஜி அதிமுக நிர்வாகியை கலாய்ப்பதாக இருந்தால் அவரை மட்டும் கிண்டல் செய்யுங்கள். தேவையில்லாமல் எங்கள் அண்ணன் சிம்புவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெயிட்டிங்
இன்னும் எந்தெந்த கட்சி எலலாம் எல்.கே.ஜி.க்கு இலவச விளம்பரம் செய்து படத்தை சூப்பர் ஹிட்டாக்கப் போகிறார்கள் என்பதை பார்க்க மக்கள் மரண வெயிட்டிங்.
கிண்டல்
இதை தான் ஆர்.ஜே. பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











