Thalapathy 69: வெற்றிமாறனுக்கு வாய்ப்பே இல்லையாம்.. விஜய்யோட தளபதி 69 படத்தை இவர் இயக்கப் போறாரா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் கடைசியாக தளபதி 69 படத்தில் தான் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தான் அந்தப் படத்தை தயாரிக்க போவதாக கூறுகின்றனர். ஆனால், இதுவரை யார் இயக்கப் போகிறார் என்கிற எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால், சில இயக்குநர்களை சந்தித்து ரகசியமாக விஜய் தனது 69வது படத்துக்கான கதையை கேட்டு வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆரம்பத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது பிரபல காமெடி நடிகர் தளபதி 69 படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தளபதி விஜய்யின் கோட் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முன்னணி நடிகர்களான பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி சவுத்ரி யங் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தளபதி 69 இயக்குநர் யார்?: கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் என பல முன்னணி இயக்குநர்களின் பெயர்கள் இதுவரை தளபதி 69 படத்தை இயக்கப் போகும் இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. மேலும், இயக்குநர் எச். வினோத்துக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், புதிதாக ஒரு இயக்குநரின் பெயரும் தற்போது இணைந்திருக்கிறது.

ஆர்ஜே பாலாஜி இயக்கப்போறாரா?: சமீபத்தில் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் ஃபிளாப் ஆனது. மூக்குத்தி அம்மன் படத்தை என்ஜே சரவணன் உடன் இணைந்து இயக்கினார். அதே போல வீட்ல விசேஷம் படத்தையும் அதே இயக்குநருடன் இணைந்து இயக்கி இருந்தார் ஆர்ஜே பாலாஜி. மேலும், விஜய்க்கு ஒரு படத்திற்கு கதை சொல்லியிருப்பதாகவும் விரைவில் படம் எடுக்கப் போவதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில், தளபதி 69 படத்தை இயக்கப் போவதே ஆர்ஜே பாலாஜி தான் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எப்படியிருந்தாலும், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் சூட்டிங் முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











