எனக்கு கல்யாணம் ஆகலன்னா ஷான் ரோல்டனை கல்யாணம் பண்ணியிருப்பேன்: ஆர்.ஜே.பாலாஜி
Recommended Video

சென்னை: எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் ஷான் ரோல்டனை மணந்திருப்பேன் என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
பாடகரும் இசையமைப்பாளருமான ஷான் ரோல்டனின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாக மிர்ச்சி சிவா, ஆர்ஜே.பாலாஜி, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சினிமாப் பாடல்கள், தனிப்பாடல்கள் என பல பாடல்களை பாடி ஷான் ரோல்டன் மகிழ்வித்தார். அப்போது மேடைக்கு அழைக்கப்பட்ட சிவா, நீங்கள் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறீர்கள். அதில் எனக்கு பிடித்தது, வெண்பனி மலரே பாட்டுத்தான், அதற்காகத்தான் இங்கு வந்தேன் எனச் சொன்னதும், அதற்கு காரணம் தனுஷ் சார் தான் என்றார் ஷான் ரோல்டன்.
எப்படி சார் எல்லாத்துக்கும் நீங்க காரணமா இருக்கீங்க? அமெரிக்காவுல எலக்ஷன் வந்தாலும் நீங்க தான் காரணமா இருப்பீங்க போல என சிவா கவுண்டர் டயலாக் அடித்ததும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
தொடர்ந்து பேசிய ஆர். ஜே.பாலாஜி, மூன்று வருடத்திற்கு முன்னாடி ஷான் கான்சர்ட்ல கலந்துகிட்டேன். அதன்பிறகு அவர் எங்கு இசை நிகழ்ச்சி பண்ணினாலும் அங்கு நான் இருப்பேன். ஏனென்றால் நான் ஷான் ரோல்டனின் தீவிர ரசிகன். மிகத் திறமையானவர், நான் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா இவரைக்கூட கல்யாணம் பண்ணிருப்பேன் என்று சொல்லி ஷான் ரோல்டனை புகழ்ந்தார்.


Click it and Unblock the Notifications











