உங்களுக்கு சிவகார்த்திகேயன் போல நல்ல தயாரிப்பாளர் கிடைச்சிருக்காரு.. ஆர்ஜே பாலாஜி ட்விஸ்ட் வாழ்த்து!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறார். சமீபத்தில் அவர் தயாரிப்பில் வெளியான தாய் கிழவி படம் 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், இன்று வெற்றி விழாவும் பிரம்மாண்டமாக ஹோட்டல் க்ரீன் பார்க்கில் நடைபெற்றது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் இயக்குநர் அம்மாமுத்து சூர்யா தான் என பெருமையோடு அறிமுகம் செய்து வைத்தார்.

RJ Balaji s cryptic wish to Ammamuthu Surya stirs Karuppu release issue controversy
Photo Credit:

இயக்குநர் அம்மாமுத்து சூர்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஆர்ஜே பாலாஜியின் வாழ்த்தில் அவரது தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு மறைமுக அடி கொடுத்துள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கால தாமதமாகும் கருப்பு: ஒரு பக்கம் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக சென்சார் கிடைக்காமல் தவித்து வருகிறது. சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் காலவதியாகவே ஆகிவிட்டது. இந்நிலையில், சூர்யாவின் கருப்பு படத்துக்கும் அதே போன்ற ஒரு நிலை உருவாகி உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கே கருப்பு ரிலீஸ் ஆக வேண்டிய நிலையில், இதுவரை அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும், இறுதிக்கட்ட படப்பிடிப்பும் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் தான் காரணமா?: ஆர்ஜே பாலாஜி கருப்பு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக வதந்திகள் பரவின. ஆனால், ஆர்ஜே பாலாஜி எஸ்.ஆர். பிரபு இடையே கடுமையான மோதல் மட்டும் நடந்திருப்பது உண்மை என தற்போது அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டை பார்த்தாலே புரிகிறது என ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.

நல்ல தயாரிப்பாளர்: இயக்குநர் அம்மாமுத்து சூர்யாவுக்கு சிவகார்த்திகேயன் போல நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார் வாழ்த்துக்கள் என்கிற விதத்தில் "Congratulations @ammamuthu_surya You're in great hands...! Rock it!!!" என ஆர்ஜே பாலாஜி ட்வீட் ஒன்றை பதிவிட்டு சற்றுமுன் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருப்பு அப்டேட் வரணும்: இன்னும் ஒரு வாரம் தான் டைம் அதற்குள் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரணும் தேவையில்லாமல் இப்படி மறைமுக ட்வீட் போட்டு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடக் கூடாது என சூர்யா ரசிகர்கள் கிளம்பி விட்டனர். மேலும், ஆர்ஜே பாலாஜியின் ஹேப்பி எண்டிங் படமும் என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X