சொர்க்கவாசல்.. ஹேப்பி எண்டிங்.. 18 பிளஸ் ரூட்டை எடுக்கும் ஆர்ஜே பாலாஜி.. டீசரே இப்படி இருக்கே!

சென்னை: ஒரு பக்கம் சூர்யாவின் 45வது படத்தை இயக்கவுள்ள ஆர்ஜே பாலாஜி அடுத்தடுத்து தான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார். கடந்த வாரம் சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியான நிலையில், தீபாவளியை முன்னிட்டு ஹேப்பி எண்டிங் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள ஹேப்பி எண்டிங் திரைப்படம் 2025ம் ஆண்டு வெளியாகும் என்கிற அறிவிப்புடன் டீசர் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

rj balaji happy ending diwali 2024

கேர்ள் ஃபிரெண்டுடன் டேட்டிங் செல்லும் இடத்தில் உன்னுடைய பாஸ்ட் பத்தி சொல்லு என அடம்பிடிக்க அப்படி யாருமில்லை என மறுத்து வரும் ஆர்ஜே பாலாஜியை ஒரு கட்டத்தில் அந்த பெண் அசிங்கமாக ஆபாச வார்த்தையால் திட்ட அதன் பின்னர், ஏகப்பட்ட காதல் தோல்விகளையும் அந்த பெண்கள் தன்னைப் போட்டு சித்திரவதை செய்ததையும் டீசரில் வெளிப்படுத்தியுள்ள விதத்திற்கு மகளிர் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் வராமல் இருந்தால் சரி தான் என்கிற அளவுக்கு டீசர் உள்ளது.

ஆபாசத்தின் உச்சம்: ஹேப்பி எண்டிங் டீசரின் ஆரம்ப காட்சியிலேயே மில்க் ஷேக் ஒன்றை குலுக்கியபடியே எக்ஸ்பீரியன்ஸ் பற்றி ஆர்ஜே பாலாஜி பேசுவதே ஆபாசத்தின் உச்சம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். கடைசியாக அந்த கத்தியை சரியா குத்துவியா என்றெல்லாம் கேட்கும் வசனம் எல்லாம் டபுள் மீனிங்கின் அட்ராசிட்டி என்றே சொல்லலாம்.

கவனம் ஈர்க்கும் மேக்கிங்: ஹேப்பி எண்டிங் என டைட்டில் வைத்த இடத்திலேயே இயக்குநர் வித்தியாசமான காதல் கதையை அதுவும் இளைஞர்களை கவரும் விதத்தில் சொல்லப் போகிறார் என தெரிகிறது. ஆர்ஜே பாலாஜியை ஒவ்வொரு பெண்களும் பிரேக்கப் என்கிற பெயரால் போட்டு அடிப்பதும் கத்தியால் குத்துவதுமாக காட்சிகள் நீள்கின்றன. துப்பாக்கியால் சுடுவது, கைதி படத்தில் வரும் அந்த பெரிய கன் எடுத்துக் கொண்டு ஒரு பெண் சுடுவது போன்ற காட்சிகள் தரமான சம்பவம்.

18 பிளஸ் ஹீரோ: காமெடி நடிகராக வலம் வந்த ஆர்ஜே பாலாஜி குழந்தைகளை கவர்வார் என்று பார்த்தால் சொர்க்கவாசல், ஹேப்பி எண்டிங் என டைட்டில் வைத்த படங்களில் நடித்து 18 பிளஸ் ஹீரோவாக மாறிவிட்டாரே என்று ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. சூப் சாங் பாடல்களுக்கே சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், அனிமல் போன்ற படங்களை பார்க்கவே மாட்டேன் என சத்தியம் செய்த ஆர்ஜே பாலாஜியா பெண்களுக்கு எதிராக இப்படியொரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் அவருக்கு எதிரான கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X