வன்முறைதான் மிகப்பெரிய கோழைத்தனம்.. வசூலை அள்ளிய சொர்க்கவாசல்.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த சொர்க்க வாசல் திரைப்படம் நவம்பர் 29ம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கிய சொர்க்கவாசல் படத்தில், ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, சானியா அய்யப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
1999ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் எரித்துக் கொல்லப்படுகிறார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதிரைப்படம் தான் சொர்க்கவாசல்.

படத்தின் கதை: இப்படத்தின் கதாநாயகன் ஆர்ஜே பாலாஜி செய்யாத குற்றத்திற்காக சிறைச்சாலைக்குச் செல்கிறார். அந்த மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ரவுடியான செல்வராகவன். அந்த சிறைச்சாலையை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறான். அவனின் அட்டகாசம் தாங்க முடியாமல், ஜெயிலர்கள் சிகாவை கட்டுப்படுத்தப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆர்ஜே பாலாஜிக்கு தான் ஜெயிலுக்கு வர முக்கிய காரணமே செல்வராகன் என்று தெரிய வருகிறது.
வித்தியாசமான ரோல்: ஆனால், ஆர்ஜே பாலாஜியால், செல்வராகவனை எதிர்க்க முடியாமல் தவிக்கிறான். இந்த நேரத்தில், சிறையில் ஒருநாள் கலவரம் வெடிக்க, அந்த கலவரத்தில் ஒரு கொலை நடக்கிறது. இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை. ஆர்ஜே பாலாஜி முதன் முறையாக இந்த திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்ற நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வருகிற 27ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
கதை திருட்டு: சொர்க்கவாசல் என்ற படம் வெளியான போது, கிருஷ்ணகுமார் என்பவர், இந்த கதை தன்னுடைய கதை என்றும், 2017ம் ஆண்டு ஒரு வழக்குத் தொடர்பாக சைதாப்பேட்டை கிளை சிறையில் இருந்த போது, அங்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து இந்தக் கதையை எழுதினேன் என்று ஆதாரத்துடன் பதில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications











