Sorgavasal Review: சொர்க்கவாசலா? நரகவாசலா? செய்யாறு பாலுவின் விமர்சனம்!

சென்னை: பன்முகத் தன்மை கொண்டவரான ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில்

சொர்க்கவாசல் திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் என்பவர் இயக்கி உள்ளார். இதில், செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை செய்யாறு பாலு விமர்சித்துள்ளார்.

sorgavasal review rj balaji cheyyaru balu

1999 சென்னை மத்திய சிறையில், ரவுடி பாஸ்கர் வடிவேலுவின் மரணம் அதை தொடர்ந்து, சிறைச்சாலையில் நடந்த கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு சொர்க்கவாசல் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், சிறைச்சாலையில், சிகா என்ற ஒரு ரவுடி இருக்கிறார். அந்த ரவுடி பக்கத்துல கூட, யாரும் போக முடியாது. அந்த சிறையில் இருக்கிற அனைவரும் ரவுடி சிகாவை பார்த்து பயப்படுறாங்க. ஒட்டுமொத்த சிறையும் அந்த ரவுடி சிகாவின் கண்ட்ரோல்ல தான் இருக்கு. இந்த சிறைக்கு சூழ்நிலை கைதியாக போறவர்தான் ஆர்.ஜே.பாலாஜி. ஒரு பக்கம் மிகப்பெரிய சிகா என்கிற ரவுடி, மற்றொரு பக்கம் அப்பாவி ஆர்.ஜே பாலாஜி இப்படி இரண்டு பேருக்கும் இடையே நடக்கிற கதை தான் சொர்க்க வாசல் திரைப்படத்தின் கதை.

மைனஸ்: இந்த திரைப்படத்தில் செல்வராகவன் சிகா என்கிற வில்லன் கதாபாத்திரத்தில நடித்திருக்கிறார். வழக்கமாக செல்வராகவன் பல திரைப்படத்தில் வில்லனா நடிச்சிருக்காரு, பகாசூரன் படத்துல அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய, செல்வராகவும் இந்த திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கான பயத்தை தரவில்லை என்று தான் தோன்றுகிறது. மொத்த சிறைச்சாலையும் சிகாவை பார்த்து பயப்படுகிறது என்று, ஓவர் பில்டப் கொடுத்திருந்தாங்க, ஆனால், அந்த வில்லன் கேரக்டருக்கான அழுத்தம் செல்வராகவனிடம் இருந்து மிஸ் ஆகி விட்டது.

பிளஸ்: இந்த திரைப்படத்திற்கு இயக்குனருக்கு பெரிய நடிகர்கள் கிடைக்காததால் ஆர்.ஜே பாலாஜியை வைத்து முயற்சி செய்து இருக்கிறார். அந்த முயற்சி நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் ஆர்.ஜே பாலாஜி இந்த அழுத்தமான கேரக்டலில் நடிக்க கடுமையாக முயற்சி செய்து இருக்கிறார். இதில், சிறப்பாக நடித்தவர்கள் கருணாஸ் மற்றும் நட்டியை சொல்லலாம். படத்தின் ரீ ரெக்காடிங், படத்தின் ஆர்ட் டேரக்ஜன் நன்றாக, இது நிஜமான ஜெயிலா, இல்லை, செட்டா என்று யோசிக்கும் அளவிற்கு செட் வொர்க் நன்றாக இருந்தது. சொர்க்கவாசல் படம் பார்த்தவர்கள் இது சொர்க்க வாசலா.. நரக வாசலா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று செய்யாறு பாலு படத்தின் விமர்சனத்தை கொடுத்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X