“வீட்ல விசேஷங்க“.. ஆர்ஜே பாலாஜி சொன்ன குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள் !
சென்னை : வீட்ல விசேஷங்க படம் குறித்து சூப்பரான தகவலை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார்.
இந்தி படமான பதாய் ஹோ படம் தமிழில் வீட்டு விசேஷங்க என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் யோகி பாபு ஆர். ஜே பாலாஜியுடன் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி
வானொலியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபரலமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இதையடுத்து, பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், எல்.கே.ஜி, படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

வீட்ல விசேஷங்க
தற்போது இவர் இயக்கத்தில் வீட்ல விசேஷங்க என்கிற படம் தயாராகி உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்தும் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜூன் மாதம் 17-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
சூப்பர் அப்டேட்
இந்நிலையில், ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில், இப்போது நான் மும்பைக்கு வந்து இருக்கிறேன். எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர் எப்படி ஐ.பி.எல் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டதோ அதை போல , என்னுடைய அடுத்த படமான வீட்டுல விசேஷங்க படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது என்று கூறினார்.

குடும்பத்தோட படத்தை பாருங்க
அதாவது, லக்னோவுக்கும் ஆர்சிபிக்கும் நடக்க உள்ள போட்டியின் போது வெயிட உள்ளோம். இந்த டிரைலர் வெளியீட்டில், சத்யராஜ், ஹீரோயின் அபர்ணா பாலமுரளி பங்கேற்க உள்ளனர். இரண்டு வருடத்திற்கு பிறகு இந்த படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. படத்தைப் பார்த்து நாங்களே... ஆ.. படம் நன்றாக வந்து இருக்கேனு ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டோம். குடும்பத்தோட சந்தோஷமா பார்க்க வேண்டிய படம் அனைவரும் பாருங்க என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார் ஆர்ஜே பாலாஜி.


Click it and Unblock the Notifications











