Bigg Boss Tamil 7 Eviction: புல்லி கேங்குக்கு முடிவா? இந்த வாரமும் பிக் பாஸில் டபுள் எவிக்‌ஷனா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் பூகம்பம் டாஸ்க் வைத்து சோஷியல் மீடியாவில் மட்டுமின்றி சினிமா துறையிலேயே மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி உள்ளனர்.

நடிகை விசித்ரா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகர் என சொன்ன கதையை கேட்ட நெட்டிசன்கள் பாலய்யா தான் அந்த நடிகர் என முடிவுக் கட்டி ஏகப்பட்ட ட்ரோல்களை பதிவிட்டு வருகின்றனர்.

RJ Bravo and Poornima will expect to evict this week from Bigg Boss Tamil 7?

இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக இருவர் வெளியேறப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த வார நாமினேஷன்: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அர்ச்சனா, விசித்ரா, மணி, பிராவோ, பூர்ணிமா, மாயா, அக்‌ஷயா, ரவீனா உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில், மக்கள் அதிகமாக இந்த வாரம் விசித்ராவை விட விஜே அர்ச்சனாவுக்கு வாக்கு அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக பேசியதில் இருந்தே அவரது ரசிகர்கள் தொடர்ந்து விஜே அர்ச்சனா மற்றும் விசித்ராவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. மேலும், இந்த வாரம் விசித்ரா சொன்ன பூகம்பம் கதை பெரிய புயலை கிளப்பி உள்ள நிலையில் அவருக்கும் ஓட்டுக்கள் குவிந்துள்ளன.

டேஞ்சர் ஜோன்: இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டேஞ்சர் ஜோனில் சுமார் 5 போட்டியாளர்கள் குறைவான ஓட்டுக்களுடன் விளிம்பு நிலையில் உள்ளனர். அதிலும், புல்லி கேங்கை சேர்ந்த மாயா, பூர்ணிமா, அக்‌ஷயா, ரவீனா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜே பிராவோவும் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் டேஞ்சர் ஜோனில் உள்ளார்.

டபுள் எவிக்‌ஷன் இருக்குமா?: இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும் என்றும் டபுள் எவிக்‌ஷனுக்கும் வாய்ப்பு இருக்கு என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏதாவது பெருசா பண்ணி பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓட்ட தொடர்ந்து அந்த டீம் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், இந்த வாரம் புல்லி கேங்கில் இருந்து ஒருவரும் இன்னொரு நபரும் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

ஆர்ஜே பிராவோ அவுட்: இந்த வாரம் குறைவான வாக்குகளுடன் ஆர்ஜே பிராவோ எவிக்ட் ஆக நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும், பூர்ணிமா அல்லது மாயா இருவரில் ஒருவர் எவிக்ட் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. நாளை ஷூட்டிங் முடிந்ததும் யார் வெளியேறினார் என்பது லீக் ஆகிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X