மனைவி ஆர்த்தியை நிஜமாகவே பிரிகிறாரா ஜெயம் ரவி?.. ஆர்ஜே ஷா என்ன சொல்றாரு பாருங்க!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி பிரியப் போவதாக திடீரென சினிமா வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுவார்த்தைகள் கிளம்பி வரும் நிலையில், பலரும் பல விதமாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவியின் பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் கண்டிப்பாக விவாகரத்து செய்யப் போவது உறுதி என்றெல்லாம் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், ஷாபூத்ரி யூடியூப் சேனலில் பேசி வரும் ஆர்ஜே ஷா இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தையும் வெளியிட்டு டிரெண்டோட டிரெண்டாக நம்முடைய வீடியோவும் அதிக வியூஸ்களை அள்ளட்டும் என இந்த விஷயத்தை கையில் எடுத்து பேசியுள்ளார்.

ஆனால், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி குறித்து தவறாகவோ சித்தரித்தோ பேசாமல் அவர்கள் இருவரது காதல் வாழ்க்கை பற்றியும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு பற்றியும் பேசியுள்ளார். மேலும், அவர்கள் இருவரும் பிரிவார்கள் என தான் நினைக்கவில்லை என்றும் இது சோஷியல் மீடியாவில் தேவையில்லாமல் கிளப்பப்படும் ஒரு பொய்யான வதந்தி தான் எனக் கூறியிருக்கிறார்.
ஜெயம் ரவி திருமணம்: அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தில் நடித்த நடிகர் ரவி அந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். எடிட்டர் மோகனின் மகன்கள் தான் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி ரவியை திருமணம் செய்துக் கொண்ட ஜெயம் ரவி 14 ஆண்டுகளுக்கு மேல் மனைவியுடன் திருமண வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
தாஜ்மகால் போட்டோஸ்: சமீபத்தில் இருவரும் தாஜ்மகாலுக்கு சென்று படு ரொமாண்டிக்காக எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்திருந்தனர். தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் பல படங்களை ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான சைரன் படத்தையும் ஜெயம் ரவியின் மாமியார் தான் தயாரித்துள்ளார்.
ஆர்ஜே ஷா பேச்சு: இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவி ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை நீக்கி விட்டார் என்றதுமே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரியப் போவதாக தேசிய ஊடகங்கள் வரை எப்படி செய்தி வருகிறது. அதே இன்ஸ்டாகிராமில் 'Married to Jayam Ravi' என இன்னமும் அவர் பயோவில் வைத்திருப்பது குறித்து மட்டும் ஏன் யாரும் பேசவில்லை என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார். சமீபத்தில் ஜெயம் திரைப்படம் 21 வருடங்களை கடந்த நிலையில், ஆர்த்தி ரவி அதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வீண் வதந்தியை கிளப்பாதீங்க?: ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே பிரச்சனை இருந்தால் அது அவர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனை. இருவரும் பிரிவதாக இருந்தால் அவர்களே அறிவிப்பார்கள். அதை விடுத்து, தேவையில்லாமல் வீண் வதந்தியை சோஷியல் மீடியாவில் யாரும் கிளப்ப வேண்டாம் என்றும் அதை வைத்து மீடியாக்களில் செய்திகள் வருவதும் ஏற்புடையதல்ல என ஆர்ஜே ஷா தனது கருத்தை இந்த விவகாரத்தில் பதிவு செய்திருக்கிறார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி தொடர்ந்து அமைதி காத்து வருவது தான் இந்த வதந்தி பூதாகரமாக வெடிக்கவே காரணம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











