twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோ.. அதிரடியாக நீக்கினார் பிரபல பாடகி சுசித்ரா..!

    By
    |

    சென்னை: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தான் வெளியிட்டிருந்த வீடியோவை பாடகி சுசித்ரா நீக்கியுள்ளார்.

    சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

    வடிவேலு என்னை நடிக்க விடாமல் டார்ச்சர் செய்தார்... காமெடி நடிகர் பெஞ்சமின் ஓபன் டாக்!வடிவேலு என்னை நடிக்க விடாமல் டார்ச்சர் செய்தார்... காமெடி நடிகர் பெஞ்சமின் ஓபன் டாக்!

    தேவையற்றக் கருத்து

    தேவையற்றக் கருத்து

    சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்குth தொடர்பான ஆவணங்களை ஒப்படைததடை அடுத்து அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக யாரும் எழுத்து மற்றும் வீடியோ மூலமாக சமூக வலைதளங்களில் தேவையற்றக் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த மாதம் 25 ஆம் தேதி பாடகியும், ஆர்.ஜே.வுமான சுசித்ரா, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    நிர்வாணமாக

    நிர்வாணமாக

    அவரது வீடியோவில், 'தந்தை மகன் இருவரின் கால்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ரத்தம் வரும் வரை முதுகில் அடித்து நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டனர்' என்று ஆரம்பித்து பல்வேறு தகவல்களை அதில் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது. பலர் இதை ஷேர் செய்திருந்தனர். வட இந்திய பிரலபங்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

    உண்மை இல்லை

    ஆனால், இந்தப் புகாரில் உண்மை இல்லை என்றும் அந்த வீடியோ காவல்துறைக்கு எதிரான வெறுப்பை ஊக்குவிப்பதாகவும் சிபி-சிஐடி தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபி-சிஐடி வெளியிட்ட அறிக்கையில், 'சுசித்ரா என்பவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைதன்மையற்றது. இதுபோன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் புலனாய்வை பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

    நம்ப வேண்டாம்

    நம்ப வேண்டாம்

    எனவே பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம்' என்று கூறியிருந்தது. மேலும் இந்த வீடியோவை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தற்போது அந்த வீடியோவை, தனது சமூக வலைதளப்பக்கங்களில் இருந்து பாடகி சுசித்ரா நீக்கியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    Tuticorin custodial deaths: RJ Suchitra takes down video after CB-CID says she exaggerated details.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X