ரஜினி பற்றி 50 மணி நேரம் பேச்சு.. உலக சாதனை படைத்த ஆர்.ஜே.விக்னேஷ்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமானது அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். அப்படத்தில் அவர் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
ரஜினிகாந்த் என்ற பெயரை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக சாதாரணமானவர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள்தான். ஏனெனில் தனது தனித்துவமான ஸ்டைல், பாடி லாங்குவேஜ், நடிப்பு என ஒவ்வொன்றிலும் ரஜினிகாந்த் அதகளம் செய்பவர். சினிமா துறைக்கு வருபவர்கள் எப்போதும் ரஜினிகாந்த்தை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டதுண்டு.

வேட்டையன்: அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் (கெஸ்ட் ரோலில் நடித்தார்) படம் வெளியானது. அதற்கு முன்னதாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ஜெயிலர் ரிலீஸ் வரை ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆடிக்கொண்டிருப்பதாகவும் விரைவில் அந்த சிம்மாசனத்திலிருந்து ரஜினி இறக்கப்படுவார் என்றும் பலர் பேசினார்கள். ஆனால் ஜெயிலர் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி எப்போதும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களை பேச வைத்தது. இப்போது வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார் அவர்.
கூலி: அந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் இயக்கியிருப்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார் ரஜினி. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கமல் ஹாசனுக்கு எப்படி லோகேஷ் பிரமாண்ட ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் கூலியும் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வறுமையில் ரஜினிகாந்த்: இதற்கிடையே ரஜினிகாந்த் இப்போது பக்குவப்பட்ட மனிதராகவும், உச்சபட்ச பணக்காரராகவும் இருக்கிறார். ஆனால் அவரது ஆரம்ப காலம் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. கூலி வேலை, நடத்துநர் என்று ஏகப்பட்ட பணிகளை செய்திருக்கிறார் அவர். பிறகு சினிமாவுக்கு வந்து சூப்பர் ஸ்டார் ஆனார். உயர்ந்த இடத்துக்கு சென்றாலும் தனது வறுமையை அவர் மறக்காததால்தான் அவர் எல்லோரிடமும் சகஜமாகவும், எளிமையாகவும் பழகுகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வதுண்டு.
ஆர்ஜே படைத்த உலக சாதனை: இந்நிலையில் ஆர்.ஜே மற்றும் நடிகராக வலம் வரும் விக்னேஷ் காந்த் உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது ரஜினிகாந்த் பற்றி 50 மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதில் இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, தேசிங்கு பெரியசாமி, பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன், நடிகர்கள் நட்டி, ராஜ் கமல், மைம் கோபி, ரியோ, விஜே சித்து உள்ளிட்ட 75க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரஜினிகாந்த் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றார் என்பது தொடர்பாக பேசினர். 50 மணி நேரம் நடந்த இந்த நிகழ்வு நேற்று மாலை நிறைவடைந்தது. இதனையடுத்து 50 மணி நேரம் தொடர்ந்து பேசியதற்கான உலக சாதனை சான்றிதழ் விக்னேஷுக்கு வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











