நிச்சயதார்த்தம் முடிந்தது... குட் நியூஸ் சொன்ன ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் !

சென்னை : காமெடி பேச்சாலும் டைமிங் கவுண்ட்டர்களாலும் யூடியூபில் பிரபலமான ஆர்.ஜே விக்னேஷ்காந்த் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நடிகர், விஜே, ஆர்.ஜே என பன்முகம் தன்மைக் கொண்டவர் விக்னேஷ்காந்த். இவர் யூடியூப் வலைத்தளத்தில் ஸ்மைல் சேட்டை எனும் நிகழ்ச்சியைத் தொடங்கியதன் மூலம் பரபலமானார். இதையடுத்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை28 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வர்ணணையாளராக நடித்திருந்தார்.

RJ Vigneshkanth engagement photos trending on social media

இதையடுத்து, ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் நண்பனாக தனது அறிமுகத்தை கொடுத்தார். இதைத் தொடர்ந்து கார்த்தி நடித்த தேவ், மீண்டும் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள நட்பே துணை, மெஹந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் ஆர்ஜே விக்னேஷ்காந்த் நடித்து உள்ளார்.

தற்போது ஆர்ஜே விக்னேஷ்காந்த் நண்பர்களுடன் ப்ளாக் ‌ஷீப், உனக்கென்னப்பா உள்ளிட்ட யூடியூப் சேனல்கள், பி.எஸ்.வேல்யூ ஓடிடி தளம் என மீடியாவில் பல துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். இப்போது ஆர்.ஜே. விக்னேஷ்காந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து, மிகவும் எளிமையான முறையில் எங்களுடைய திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு நிச்சயம் உங்கள் அனைவருக்கும் அழைப்பு வரும். கல்யாண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ப்ளாக்‌ஷீப் நண்பர்கள், நடிகர் ரியோ குடும்பம் என ஆர்.ஜே. விக்னேஷ்காந்தின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ள இந்த தம்பதிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் தற்போது காசமோசா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜெயிக்கிற குதிரை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். ஆர்.ஜே, விஜே, நடிகர் என பல திறமைகளைக் கொண்ட ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் ஒரு பாடலை எழுதி பாடலாசிரியராகவும் விளக்குகிறார்.

More from Filmibeat

Read more about: rj vigneshkanth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X