பிளாக்‌ஷீப் ஆர்ஜே விக்னேஷ்காந்த் திருமணம்.. மாவீரன் லுக்கில் மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

சென்னை: பிரபல யூடியூபரும் நடிகருமான ஆர்ஜே விக்னேஷ்காந்த் திருமணம் இன்று சென்னையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

ஆடிப் போய் ஆவணி வந்தாலே மண்டபங்கள், கோயில்கள் எல்லாம் திருமணத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்டு போடும் அளவுக்கு புக் ஆகி விடுகின்றன.

சமீபத்தில், குக் வித் கோமாளி புகழ் - பென்ஸியா திருமணம் மற்றும் ரவீந்தர்- மகாலக்‌ஷ்மி திருமணம் என வரிசையாக பிரபலங்களின் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

பிளாக்‌ஷீப்பின் பில்லர்

பிளாக்‌ஷீப்பின் பில்லர்

ஸ்மைல் சேட்டை எனும் யூடியூப் சேனலில் தனது நண்பர்களுடன் பணியாற்றி தமிழ்நாட்டில் பல இளைஞர்களை யூடியூப் ஆரம்பித்தே பிழைத்துக் கொள்ளலாம் என்கிற ஐடியாவை கொடுத்த ஒரு சில யூடியூபர்களில் மிகவும் முக்கியமானவர் ஆர்ஜே விக்னேஷ்காந்த். பார்க்க விஜயகாந்த் மாதிரி இருப்பதால் தனது பெயரை விக்னேஷ்காந்த் என்று வைத்துக் கொண்டாரா என ஏகப்பட்ட நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது வழக்கம். ஸ்மைல் சேட்டையை தொடர்ந்து பிளாக்‌ஷீப் யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார்.

படங்களிலும் நடித்துள்ளார்

படங்களிலும் நடித்துள்ளார்

சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் கமெண்ட்டேட்டராக நடித்த ஆர்ஜே விக்னேஷ்காந்த் அனைத்து யூடியூபர்களையும் வைத்து ஹிப் ஹாப் ஆதி எடுத்ஹ மீசையை முறுக்கு மற்றும் ரியோ ராஜ் நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படங்களில் காமெடி நண்பனாக நடித்திருந்தார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

கடந்த மேம் மாதமே தனது நிச்சயதார்த்தத்தை ரகசியமாக நடத்திக் கொண்ட ஆர்ஜே விக்னேஷ்காந்த் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். கடந்த 2018ம் ஆண்டே நடக்க வேண்டிய இவரது திருமணம் சில பல காரணங்களுக்காக தடை பட்டது பெரும் பேசு பொருளாக மாறியது.

ஆர்ஜே விக்னேஷ்காந்த் திருமணம்

ஆர்ஜே விக்னேஷ்காந்த் திருமணம்

இந்நிலையில், இன்று சென்னையில் மிகவும் எளிமையான முறையில் ஆர்ஜே விக்னேஷ்காந்த் குறிப்பிட்ட சில திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் ஆர்ஜே விக்னேஷ்காந்தை வாழ்த்தி வருகின்றனர்.

தாலி எடுத்துக் கொடுத்த ஞானசம்பந்தம்

தாலி எடுத்துக் கொடுத்த ஞானசம்பந்தம்

பிரபல பட்டிமன்ற நடுவரும் நடிகருமான கு. ஞானசம்பந்தம் தாலி எடுத்துக் கொடுக்க தனது திருமணத்தை நடத்தி முடித்தார் விக்னேஷ்காந்த். அதன் புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ஞானசம்பந்தம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் மணமக்கள் ஆசி பெற்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

மணமக்களை வாழ்த்திய மாவீரன்

மணமக்களை வாழ்த்திய மாவீரன்

ஆர்ஜே விக்னேஷ்காந்துக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மாவீரன் கெட்டப்பில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் தீயாக ஷேர் செய்ப்பட்டு வருகின்றன. தனது திருமணத்துக்கு வந்து தன்னை வாழ்த்திய சிவகார்த்திகேயனை பார்த்ததுமே சந்தோஷத்தில் மிதந்த ஆர்ஜே விக்னேஷ்காந்த் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X