Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“தர்பார்” இசைவெளியீடு.. ஆர்ஜே விக்னேஷ்காந்த் வேறலெவல்!
Recommended Video
சென்னை : சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தொகுப்பாளராக ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் மற்றும் ரம்யா தொகுத்து வழங்கி இசைவெளியீட்டு விழாவை சுவாரசியமாக்கினர்.
தர்பார் படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் ,சுனில் ஷெட்டி,யோகி பாபு,தம்பி ராமையா, ஶ்ரீமன்,ஜத்தின் சர்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இசைவெளியீட்டு விழாவை ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் ரம்யா ஆகியோர் தொகுதித்து வழங்கினார்கள். விக்னேஷ் தனக்கே உரித்தான காமடி சென்ஸ் மூலம் சும்மா செமையா தொகுந்து வழங்கி விழாவை வேறலெவலுக்கு கொண்டு போனாரு.
முதல்ல தனுஷ், இப்ப விஜய் சேதுபதி... பரபர மகிழ்ச்சியில் நம்ம பச்சையம்மாள்
அதுக்கு ஈடு கொடுத்தாங்க நம்ம விஜய் டிவி வி.ஜே ரம்யா. விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர். மங்காத்தா, ஒ காதல் கண்மணி போன்ற படங்களில் துணை நடிகை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆல் ரவுண்டரான ரம்யா கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என பிசியா உள்ளார். அண்மையில் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவை தொகுதி வழங்கிய ரம்யா, சுப்பர் ஸ்டாரின் தர்பர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுது வழங்கி தானது ரேஞ்சை உயர்த்தி உள்ளார்.

ஸ்மைல் சேட்டை என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்தார் ஆர்.ஜே.விக்னேஷ், பல இணைய பயன்பாட்டாளர்களால் கவரப்பட்டு அந்த சேனல் எங்கோ சென்றது இதையடுத்து பிளாக் சீப் சேனலை துவங்கி வெற்றி கரமாக நடத்தி வருகிறார்.அதே நேரத்தில் கமலின் பிறந்தநாளுக்கு 12மணி நேரம் அவரை பற்றி பேசி சாதனை புரிந்தார். இதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் விக்னேஷ்காந்தை ஒரு தனியார் நிகழ்ச்சியில் அழைத்து பாராட்டினார். சினிமாவில் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்னேஷ் அவ்வப்போது படங்களின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார்.