அடேங்கப்பா... பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட்!

By Vignesh Selvaraj

Recommended Video

ராஜமௌலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா..??

சென்னை : 'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் எடுத்துச் சென்றவர் இயக்குனர் ராஜமௌலி.

ராஜமௌலியின் 'பாகுபலி' இரண்டு பாகமும் சேர்த்து ரூ. 2500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இப்படத்தையடுத்து இவர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

பிரமாண்ட பாகுபலி

பிரமாண்ட பாகுபலி

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தில் மிகப் பெரும் வசூல் சாதனையைப் புரிந்தவர் இயக்குனர் ராஜமௌலி. இந்தி திரைப்படங்கள் மட்டும்தான் பெரிய அளவில் வசூலிக்க முடியும் என்றிருந்ததை முறியடித்து ஒரு தெலுங்குப் படத்தாலும் அப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியும் என்று பிராந்திய மொழித் திரையுலகங்களுக்குப் புரிய வைத்தார்.

ராஜமௌலியின் அடுத்த படம்

ராஜமௌலியின் அடுத்த படம்

'பாகுபலி 2' படம் வெளிவந்து எட்டு மாதங்களுக்கு ஆன பின்னும் அவர் தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் உள்ளார். வரும் அக்டோபர் மாதம் தான் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட்

பட்ஜெட்

ராம்சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நாயகர்களாக நடிக்க உள்ள அந்தப் படத்திற்காக இயக்குனர், ஹீரோக்கள் சம்பளம் இல்லாமல் சுமார் 90 கோடி வரை ராஜமௌலி பட்ஜெட் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து தயாரிப்புச் செலவு மட்டும் 300 கோடி என்று செய்திகள் வெளியாகின.

150 கோடி பட்ஜெட்

150 கோடி பட்ஜெட்

இயக்குனர் ராஜமௌலி, நாயகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் ஆகியோரது சம்பளத்தையும் சேர்த்தால் படத்தின் பட்ஜெட் 150 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். அதனால், படத்தைத் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X