நீயும் நானும் நடுவுல பேயும்... ஆர்கேயுடன் மீண்டும் இணையும் வடிவேலு!

By Shankar

ஆர்கே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் அடுத்து வரும் படம் வைகை எக்ஸ்பிரஸ். இந்தப் படத்தை ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார்.

பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

RK joins with Vadivelu for Neeyum Naanum Naduvula Peyum

கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ்.

அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தையும் தொடங்குகிறார் ஆர்கே.

மக்கள் பாசறை வழங்கும் இந்தப் படத்தை ஆர் கே நடிக்க 'தண்ணில கண்டம்' படத்தின் இயக்குநர் எஸ் என் சக்திவேல் இயக்குகிறார். எல்லாம் அவன் செயல், அழகர்மலை ஆகிய படங்களில் ஆர் கே -வடிவேலு காம்பினேஷன் கலக்கியெடுத்தது. இன்று வரை தொலைக்காட்சிகளில் ஆர் கே வடிவேலு நடித்த எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களின் காட்சிகள்தான் அதிகம் பார்த்து ரசிக்கும் காமெடியாக உள்ளது.

RK joins with Vadivelu for Neeyum Naanum Naduvula Peyum

இந்த கூட்டணி மீண்டும் "நீயும் நானும் நடுவுல பேயும்" படத்துக்காக இணைகிறது.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது இந்தப் படம். வடிவேலு முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி எடுக்கும் கேரக்டரில் படம் முழுக்க வருகிறார். முன்னணி கதாநாயகி நடிக்கவிருக்கிறார்.

எல்லாம் அவன் செயல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

RK joins with Vadivelu for Neeyum Naanum Naduvula Peyum

சென்னை, கேரளா, மற்றும் வெளிநாடுகளில் புத்தாண்டு தொடங்கி படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X