ஒத்தி வைக்கப்பட்ட ஆர்.கே. நகர் ரிலீஸ்: வெங்கட் பிரபுவுக்கு பிரஷர் கொடுத்தது யார்?
Recommended Video

சென்னை: ஆர்.கே. நகர் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட வைத்துவிட்டார்கள் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் நடித்த ஆர்.கே. நகர் படத்தை வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். இந்நிலையில் பட ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
இல்லை இல்லை தள்ளி வைக்கப்படுத்தப்பட்டது.
வெங்கட் பிரபு
ஆர்.கே. நகர் பட ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது குறித்து வெங்கட் பிரபு ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஆர்.கே. நகர் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸாகவிருந்தது. சில பல காரணங்கள், நாங்கள் பண்ணாத தப்புக்காக நாங்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறோம். தேர்தலுக்கு பிறகு தான் படத்தை ரிலீஸ் பண்ண முடியும் என்று சொல்லிவிட்டார்கள். அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை. இந்த படத்தில் அரசியல் இல்லை. தல பாணியில் வாழு வாழ விடு என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கோபம்
வெங்கட் பிரபு அந்த வீடியோவில் அமைதியாக பேசினாலும் அவர் அணிந்துள்ள டி-சர்ட்டில் கடுப்பேத்துறார் மை லார்ட்- நான் கோபமாக உள்ளேன் என்று எழுதப்பட்டுள்ளது. வார்த்தைகளால் சொல்ல முடியாததை டி-சர்ட் மூலம் கூறிவிட்டார் அவர்.

சந்தோஷம்
பட ரிலீஸை தள்ளி வைக்கச் சொன்னால் கஷ்டமாகத் தான் இருக்கும் வெங்கட் பிரபு. யார் தள்ளி வைக்கச் சொன்னார்களோ அவர்களுக்கு நன்றி கூறுங்கள். படத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்துவிட்டார்கள். படத்தை தள்ளி வைக்க வற்புறுத்தியிருக்கிறார்கள் என்றால் அதில் அப்படி என்ன உள்ளது என்பதை பார்க்கும் ஆவல் எழுந்துள்ளது.

பட்டியல்
படத்தை தேர்தலுக்கு முன்பு வெளியிடக் கூடாது என்று கட்டாயப்படுத்தியவர்களின் பெயர்களை வெங்கட் பிரபு கூறவில்லை. ஆனால் அது யார், யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











