ரோஜா அம்மாவால் வந்த சண்டை.. மேடையில் கோவமாக பேசிய அஜித். ஆர்.கே செல்வமணி சொன்ன தகவல்!

சென்னை: நடிகர் அஜித்திற்கு நடந்த சில கசப்பான சம்பவங்களால் தான் அவர், முழுக்க முழுக்க தன்னை தனிமை படுத்திக்கொண்டார். அவர் பொதுநிகழ்ச்சிகள் ஏன், அவர் படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வது இல்லை. இதற்கான காரணம் குறித்து ஆர்.கே செல்வமணி சொன்ன பழைய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதில், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் படத்தைத் தொடர்ந்து அசுரன் என்ற படத்தை எடுக்க பிளான் போட்டு இருந்தேன், போது அந்த படத்தில் நடிக்க இளம் ஜோடி தேவைப்பட்டது. அப்போது தான் ரோலுக்கு அஜித் சரியாக இருப்பார் என்று ஜான் என்பவர் எனக்கு அஜித்தை அறிமுகப்படுத்தினார். அவரைப் பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது, ஆனால், அசுரன் படத்திற்கு அவர் செட்டாக மாட்டார் என்பதால், நான் ஜானிடம் அஜித் வேண்டாம். வேறொரு ஜூனியர் ஆர்டிஸ்டை வைத்து படப்பிடிப்பை நடத்தலாம் என்று கூறினேன்.

Ajith RK Selvamani throwback

ரோஜா அம்மாவால் வந்த சண்டை: இதையடுத்து, 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' என்ற படத்தில் அஜித், என் மனைவியுடன் இணைந்து நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, எனது மாமியாருக்கும் அஜித்திற்க்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. மேலும் எனது மாமியார் அஜித்துடன் மிகவும் நெருக்கமாகி அம்மா, மகன் என்ற அளவிற்கு பழகினார்கள். ஒருக்கட்டத்தில் என்னுடைய மாமியார் அஜித்திற்கு என்று தனியாக சாப்பாடு செய்து கொடுக்கவும் ஆரம்பித்தார். ஆனால் அதை பார்த்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. என் மாமியாரை நான் திட்டினே. அஜித் என்னை அம்மா என்று அழைத்து விட்டான், அதனால் எனக்கு அவர் இன்னொரு பிள்ளை விவாதம் செய்ய ஆரம்பித்தார்.

கட்டாயப்படுத்தினார்கள்: அதையடுத்துத்தான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அஜித், தன்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைத்ததாக, கொந்தளித்து பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டினார். இது அப்போது மிகவும் சர்ச்சைக்குள்ளானது. ஆனால், உண்மையில், நாங்கள் அவரை அந்த நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி கட்டாப்படுத்தவே இல்லை.

அதுதான் கோவம்: அந்த சமயத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தில்தான் அஜித் படங்களை செய்து கொண்டிருந்தார். அப்போது விநியோகஸ்தர்களுக்கும் அஜித்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் விநியோகஸ்தர்கள் அவருக்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டார். இந்த கோபத்தைதான் அஜித் அந்த மேடையில் அப்படி பேசிவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் மீது சில நடவடிக்கை எடுக்கப்பட்டது அதில் அஜித்திற்கும் என் மீது வருத்தம் இருந்தது. என்று ஆர்.கே செல்வமணி பேசி இருந்தார்.

ஆர்கே செல்வமணி: நடிகர் மணிவண்ணனின் உதவி இயக்குநராக இருந்த ஆர்.கே.செல்வமணி, விஜயகாந்த்தை வைத்து, புலன் விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, கேப்டன் பிரபாகரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இதைத்தொடர்ந்து செம்பருத்தி, பொன் விலங்கு, கண்மணி, ராஜ முத்திரை என பல திரைப்படத்தை எழுதி இயக்கி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X