twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெப்சி கட்டியிருக்கும் பிரமாண்ட ஸ்டூடியோ ஜூலை மாதம் திறக்கப்படும் - ஆர்.கே.செல்வமணி

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) சார்பில் சென்னை பையனூரில் 15 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டூடியோ அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் நிறைவடைகின்றன.

    கடந்த 2010-ம் ஆண்டு திரைத்துறையினர் வீடுகட்டிக் கொள்வதற்காகவும், ஸ்டூடியோ அமைக்கவும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட 65 நிலத்தில் இந்தியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக 15 ஏக்கர் பரப்பளவில் உருவாகி இருக்கிறது இந்த பையனூர் பெப்சி ஸ்டூடியோ. திரைப்பட தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகளும் கட்டப்படஇருக்கின்றன. முதற்கட்டமாக 6 ஏக்கரில் 640 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க இருக்கின்றன.

    RK selvamani says Fefsi studio to be open on july

    பெப்சி ஸ்டூடியோ பணிகள் அடுத்த மாதம் 15-ம் தேதி வாக்கில் நிறைவடைய இருக்கின்றன. வரும் ஜூலை மாதம் திறப்பு விழா நடைபெறும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது, "இந்த ஸ்டூடியோவிற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு படப்பிடிப்பு அரங்கம் என பெயர் சூட்டப்படுகிறது. ரூ.6 கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 6 படங்களின் படப்பிடிப்புகளை இங்கே நடத்த முடியும். ஜூலை மாதத்தில் திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். திறப்பு விழாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அழைத்துள்ளோம்." என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

    English summary
    FEFSI studio has been set up on 15 acres of land in Chennai Paiyyanoor. FEFSI president RK Selvamani said that the opening ceremony of studio would be held in July.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X