நடிகர்களை கெடுத்து.. சினிமாவை அழித்தது ஓடிடி தளங்கள் தான்.. ஆர்கே செல்வமணி பேச்சு!

சென்னை: 'ஹார்ட்லி பேட்டரி' வெப் தொடர் ZEE5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 16ந் தேதி அன்று வெளியாக உள்ள, ஒரு தமிழ் ரொமான்டிக் சயின்ஸ் ஃபிக்சன் வெப் தொடர் ஆகும். இதை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார், இதில் குரு லக்ஷ்மன் மற்றும் பாதினி குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்கே செல்வமணி, சினிமாவை கெடுத்ததே ஓடிடி தளங்கள் தான் என்றார்.

RK Selvamani OTT
Photo Credit:

ஓடிடி தளங்கள் வந்த புதிதில் அதிகமான விலையை கொடுத்து எங்களை கெடுத்துவிட்டீர்கள். சினிமா துறையை கெடுத்ததில் முதல் ஆள் நீங்கள்தான். ரூ.10 கோடி சம்பளம் வாங்கும் நடிகருக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுத்தீர்கள். இன்று நஷ்டம் ஆகிறது என படம் வாங்குவதை நிறுத்தி விட்டீர்கள். நீங்கள் நிறுத்திவிட்டாலும், சம்பளத்தை உயர்த்தியவர் யாரும் இறங்கி வரவில்லை. உச்சாணி கொம்பிலே அமர்ந்திருக்கிறார்கள், நாங்கள் கீழேயே நிற்கிறோம். அவர்கள் என்றாவது இறங்கி வருவார்கள் அவரைகளை வைத்து படம் எடுக்கலாம் என்று காத்திருக்கிறோம். ஆனால், அவர்கள் இறங்கி வரவில்லை, சம்பளத்தை ஏற்றிவிட்டவர்களும் கடையை சாத்தி கிளம்பிவிட்டீர்கள். இப்போது பெரிய படங்கள் ஷூட் போவதற்கே கஷ்டமாக இருக்கிறது.

ஆர்கே செல்வமணி பேச்சு: இதனால் திரைப்பட துறையோடு கலந்து பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். சினிமா நன்றாக இருந்தால் மற்ற ஊடகங்களும் நன்றாக இருக்க முடியும். நாங்க படத்தை எடுத்தால் தானே நீங்கள் திரையிட முடியும். இதனால் அனைத்து ஓடிடி தளங்களுக்கும், ஊடகங்களுக்கும் இதன் மூலமாக வேண்டுகோளை வைக்கிறேன். புலன்விசாரணை படத்தை இயக்கும் போது ஒரு லைட்மேன், ஒரு டிரைவர் சம்பளத்தை விட மிகவும் குறைவான சம்பளத்தை வாங்கினேன். அந்த சம்பளத்திற்காக நான் வேலை செய்யவில்லை. அந்த படம் என்னுடைய படைப்பு, என் கனவு, புலன்விசாரணை படத்தின் பட்ஜெட் அப்போது ஒரு கோடி ரூபாய், என்னை நம்பி யாரோ ஒரு தயாரிப்பாளர் என் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரித்தார். அந்த நம்பிக்கை தான் என் சம்பளம் என் நினைத்தேன். புலன்விசாரணை படம் வெளியாவதற்கு முன்பு என் வீட்டு வாடகையை கூட கொடுக்க முடியாத நிலையில் இருந்தேன். ஆனால், படம் வெளியான அடுத்த நாள் நான் கோடீஸ்வரன் ஆகிவிட்டேன். அது தான் என் உழைப்புக்கான வெகுபதியாக நான் பார்க்கிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் ஆர்கே செல்வமணி பேசி இருந்தார்.

More from Filmibeat

Read more about: rk selvamani ott ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X