விஜய்க்கு ரசிகர்கள் பாதியா குறைஞ்சிடுவாங்க.. பிரபல இயக்குநர் என்ன இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: ஃபெப்சி அமைப்பின் தலைவராக உள்ள இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அரசியலுக்கு சென்று விட்டால் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் பாதியாக குறைந்து விடுவார்கள் என அதிரடியாக பேசியுள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தார்.

தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைமை தயாரிப்பாளர்கள் படும் கஷ்டம், நடிகர்கள் புரமோஷன்களை தவிர்ப்பது, அட்வான்ஸ் வாங்கிவிட்டு தனுஷ் நடிக்க மறுப்பது, அசோக் செல்வன் பட புரமோஷனுக்கு வராமல் இருந்தது, விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை என ஏகப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார்.

Vijay RK Selvamani GOAT

அதில், நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது குறித்தும் அவர் தனது கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். விஜய்யின் அரசியல் குறித்து ஆர்.கே. செல்வமணி பேசியது குறித்து இங்கே பார்க்கலாம்.

தளபதி விஜய்: 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் தளபதி 69-வது படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்துள்ள விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறி மக்களுக்கு தொண்டு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் மன்னனாகவும் இருக்கும் விஜய் இப்படியொரு முடிவை எடுத்தது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும் இப்போ அவர் ஓகே சொன்னால் கூட பல தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் தயாரிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

பாதியாக குறைந்து விடுவார்கள்: நடிகர் விஜய் சினிமாவில் இருக்கும் போது அவருக்கு 100% ரசிகர்கள் இருப்பார்கள். ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் என்னதான் சண்டை போட்டாலும் விஜய் படம் வெளியானால் முதல் நாளிலேயே சென்று பார்த்து விடுவார்கள். ஆனால், அரசியல் என்று வந்துவிட்டால் இப்போது இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அப்படியே விஜய்க்கு பாதியாக குறைந்து விடும் என ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்: இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. செல்வமணியின் இந்த பேச்சுக்கு கீழ் ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் அதெல்லாம் குறையாது என்றும் 2026ல் அவரது பலத்தை பார்ப்பீங்க என்றும் ரோஜாவுக்கு மவுசு குறைந்தது போல விஜய்க்கும் குறைந்து விடும் என நினைக்க வேண்டாம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கோட் 3வது சிங்கிள்: வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய், மீனாட்சி சௌத்ரி நடித்துள்ள கோட் படத்தின் மூன்றாவது சிங்கிளான ஸ்பார்க் பாடல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வெளியான கோட் படத்தின் பாடல்களை விட அதிகம் வியூஸ்களை இந்த பாடல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X