1,000 ரூபாய் இலவசமும் வேணாம்.. இலவச சிலிண்டரும் வேணாம்.. ஆர் கே செல்வமணி பேச்சு!

சென்னை: சினிமாக்காரர்களுக்கு அரசாங்கம் அள்ளிக் கொடுக்கிறது எனப் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்... ஆனால் உண்மை அதுவல்ல என ஆர்கே செல்வமணி பேசி உள்ளார்.

வடபழனியில் உள்ள பிரசாத்லேபில் தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நடைபெற்றது. இதில் பேசிய செல்வமணி, சினிமாக்காரர்களுக்கு கவர்மெண்ட் அள்ளிக் கொடுக்குதுன்னு பலபேர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா உண்மையை நான் இந்த மேடையில் உரக்கச் சொல்றேன். அப்படி எதுவும் செய்யவில்லை. போன வருஷம் தமிழ் சினிமா மூலமாக அரசுக்கு வந்த வருமானம் மட்டும் 3,000 கோடி ரூபாய். அந்த 3,000 கோடிக்கு நாங்க கட்டுன ஜிஎஸ்டி (GST) வரி மட்டுமே 540 கோடி ரூபாய். ஆனா, இந்த அரசாங்கம் இதுவரைக்கும் எங்களுக்கு எதுவுமே செய்யலை.

RK Selvamani Speech the PRO Union Swearing in Ceremony Event

"7 லட்சமும் சங்கிலியும்தான் மிச்சம்: ஒரு படத்துக்கு அரசு தரப்பில் 7 லட்சம் ரூபாய் கொடுப்பாங்க... அதுலயும் 50 சதவீதம் தான் கைக்கு வரும். அப்புறம் விருது கொடுக்கும்போது ஒரு சங்கிலி போடுவாங்க... அவ்வளவுதான் அவங்க செய்யுறது. இதை வச்சுக்கிட்டு ஜனங்க என்னடான்னா, 'சினிமாக்காரர்களுக்கு எல்லாம் கொடுத்துட்டாங்க'னு பேசுறாங்க.

15 வருஷத்துக்கு முன்னாடி கொடுத்த 100 ஏக்கர் இடத்துல இன்னமும் வீடு கட்டுறதுக்கான முயற்சியைத்தான் நாங்க பண்ணிட்டு இருக்கோம். நாங்க வருஷத்துக்கு நூற்றுக்கணக்கில் கோடிகளை அரசுக்குக் கொடுக்கும்போது, சினிமா தொழிலாளர்களுக்காக ஒரு 100 முதல் 150 கோடி ரூபாய் வரை செலவு செஞ்சா அதுவே பெரிய விஷயம்.

RK Selvamani Speech the PRO Union Swearing in Ceremony Event

இலவசம் தராதீங்க: கொள்ளையடிச்சு 1,000 ரூபாய், 2,000 ரூபாய்னு இலவசப் பணம் தர வேண்டாம்... இலவசச் சிலிண்டரும் தர வேண்டாம், எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக்கிறோம். எங்ககிட்ட திறமை இருக்கு. ஆனா, தமிழ்நாட்டு மக்கள் யாரிடமாவது கையேந்தும் சூழ்நிலையில் இல்லை. எங்களுக்கு லஞ்சமற்ற நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, பாதுகாப்பான சமுதாயம் இருந்தா போதும். என் மகள் ராத்திரி 12 மணிக்கு வெளியே போயிட்டுப் பத்திரமாக வீட்டுக்கு வந்தாலே அதுவே எங்களுக்குப் போதும் எனப் பேசி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய புயலையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X