இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி
Recommended Video
சென்னை: இயக்குநர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே. செல்வமணி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக இருந்த விக்ரமனின் பதவிக்காலம் முடிவடையவிருந்த நேரத்தில் பொதுக்குழு கூடியது. அந்த கூட்டத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவை இயக்குநர் சங்க தலைவராக ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல் தான் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை பாரதிராஜா ஏற்கவில்லை. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். முறைப்படி தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்யுமாறு அவர் வலியுறுத்தினார். இதையடுத்து இயக்குநர் சங்க தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த தேர்தலில் 6 தபால் வாக்குகள் பதிவானது. தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணியும், வித்யாசாகரும் போட்டியிட்டார்கள்.
இதில் ஆர்.கே. செல்வமணி 1, 386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதிவான 1, 503 வாக்குகளில் செல்வமணிக்கு 1, 386 வாக்குகள் கிடைத்துள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகருக்கு வெறும் 100 வாக்குகள் தான் கிடைத்தது. இயக்குநர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த இடத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் சூர்யா விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவரோ, சூர்யா போன்று அனைவரும் நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு அதிமுக, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் எஸ்.ஏ. சந்திரசேகர் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் இயக்குநர் சீமானும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சிலர் எல்லாம் படத்தில் மட்டும் பன்ச் டயலாக் பேசினால் போதாது நிஜத்திலும் பேச வேண்டும். சூர்யாவின் துணிச்சலை பாராட்டுகிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











