RK Suresh: ஆருத்ரா மோசடி.. ஆர்.கே. சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய போலீஸார்.. என்ன ஆகப் போகுதோ?

சென்னை: ஆருத்ரா மோசடியில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரை விசாரிக்க போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஆனால், வெளிநாட்டில் தான் இருப்பதாகவும், தனக்கும் அந்த மோசடிக்கும் எந்த தொடர்பு இல்லை என ஆர்.கே. சுரேஷ் தகவல் தெரிவித்து இருந்தார்.

RK Suresh bank account seized for Aarudhra cheat case

இந்நிலையில், ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்கை அதிரடியாக போலீஸார் முடக்கி விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பல கோடி மோசடி: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தை தொடங்கி சுமார் ஒரு லட்சம் மக்களை ஏமாற்றி 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நிதி நிறுவனத்தை சார்ந்த சிலரை கைது செய்தும் 5 பேர் முக்கிய குற்றவாளிகள் என அறிவித்து தேடுதல் வேட்டைகளையும் நடத்தி வருகின்றனர்.

தலைமறைவான ஆர்.கே. சுரேஷ்: மருது, பில்லா பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த ஆர்.கே. சுரேஷ் சினிமா விநியோகஸ்தரராகவும் தயாரிப்பாளர்காவும் பணியாற்றி வந்தார். ஆருதரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக தகவலக்ள் வெளியான நிலையில், அவரை விசாரிக்க போலீஸார் முயற்சி செய்தனர்.

ஆனால், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார் ஆர்.கே. சுரேஷ் என்று விசாரணைக்கு அழைத்தால் தான் படத் தயாரிப்பு விஷயமாக வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாகவும் வர தாமதம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார் என குற்றச்சாட்டுக்கள் அவர் மீது அடுக்கப்பட்டுள்ளன.

RK Suresh bank account seized for Aarudhra cheat case

வங்கி கணக்கு முடக்கம்: இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷின் வங்கி கணக்கில் முறையற்ற பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று இருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து அவரது வங்கிக் கணக்கை முடக்கி உள்ளனர்.

பொருளாதார போலீஸார் இந்த அதிரடி நடவடிக்கையை தற்போது மேற்கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்யவே முடக்கி இருப்பதாகவும் சினிமா தயாரிப்பு சம்பந்தப்பட்ட பணப் பரிவர்த்தனை மட்டும் நடந்திருந்தால் கணக்கு திரும்பவும் ஒப்படைக்கப்படும் என்றும் அதற்கு மாறாக ஆருத்ரா நிறுவன மோசடி பணத்தை அவர் பரிமாற்றம் செய்திருந்தால் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணம் கைப்பற்றப்படும் என போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X