வேற லெவல் ஆக்டிங் டார்லிங்… எஸ்ஜே சூர்யாவிற்கு சிறப்பான வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர்
சென்னை : நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாநாடு.
Recommended Video
இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யவின் நடிப்பு பரவலாக பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது.
அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டவர்ள் நடிப்பில உருவாகியுள்ள படம் மாநாடு. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான இந்தப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பரவலாக பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது. டைம் லூப் பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

ரசிகர்களின் பாராட்டு
நீண்ட நாட்களாக ரிலீசுக்காக போராடிக் கொண்டிருந்த இந்தப் படம் தறபோது வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இரு தினங்களில் சிறப்பான வசூலையும் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிசிலும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.

எஸ்ஜே சூர்யாவிற்கு பாராட்டு
குறிப்பாக படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு மிகுந்த பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது. படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ள அவர், சிம்புவிற்கு ஸ்டப் கொடுக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேசும் சில டயலாக்குகள் படத்தில் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது

வெங்கட் பிரபு அரசியல்
வெங்கட் பிரபுவின் அரசியல் என்ற விளம்பரத்துடன் இந்தப் படம் வெளியான நிலையில், படத்தில் நடித்துள்ள அனைவரது நடிப்பும் சிறப்பான கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது. ஆயினும் அனைவரையும் ஓரம்கட்டும்வகையில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு அமைந்துள்ளது. எப்போதுமே தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவரும் சூர்யா இந்தப் படத்தில் கொஞ்சம் அதிகமாகவே தனது கேரக்டருக்காக மெனக்கெட்டுள்ளார்.

ஆர்கே சுரேஷ் பாராட்டு
இந்நிலையில் படத்தில அவரது நடிப்பை சக நடிகர்கள், விமர்சகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் அவரது நடிப்பை சிலாகித்துளளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் டார்லிங் பிரதர் டியர் எஸ்ஜே சூர்யா வேற லெவல் ஆக்டிங் என்று பாராட்டியுள்ளார். மேலும் பாராட்டை தெரிவிக்கும்வகையில் எமோஜிக்களையும் சேர்த்துள்ளார்.

எஸ்ஜே சூர்யா புகைப்படம்
மேலும் சிம்பு, மாநாடு டீம் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டவர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். எஸ்ஜே சூர்யாவின் ஸ்டைலான மற்றும் கம்பீரமான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மாநாடு படம் வெளியாகுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடைசி நேரத்தில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











