ஆர்கே சுரேஷின் குட்டி தேவதை… தந்தையர் தினத்தில் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி !

சென்னை : நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் தனது குழந்தையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தந்தையர் தினமான இந்நாளில் இப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தந்தை மகளின் புகைப்படம் அனைவரையும் கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ஆர்கே சுரேஷ் தம்பிக்கோட்டைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தார்.

நடிகராக அறிமுகம்

நடிகராக அறிமுகம்

பாலாவின் இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை படத்தில் கருப்பையா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின் மருது, ஸ்கேட், பில்லா பாண்டி, காளி போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல படங்களிலும் மிரட்டலான வில்லனாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

திருமணம்

திருமணம்

ஆர்கே சுரேஷ் சினிமா பைனான்சியரான மது என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு இஷார்யா என பெயர் வைத்துள்ளனர்.

தந்தையா இருப்பதில் மகிழ்ச்சி

தந்தையா இருப்பதில் மகிழ்ச்சி

இந்நிலையில், ஆர்கே சுரேஷ், தனது குழந்தையின் முதல் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தந்தையர் தினமான இந்நாளில், ஆர்.கே.சுரேஷ் ஒரு தந்தையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்து தனது மகள் இஷார்யாவின் முதல் படத்தை பகிர்ந்துள்ளார்.

குட்டி தேவதை

குட்டி தேவதை

ஆர்.கே.சுரேஷ் தனது மகளை தனது காரில் அழைத்துச் செல்கிறார், அதே நேரத்தில் அழகான குட்டி தேவதை தனது தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். இஷார்யாவின் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும், பலரும் தந்தை மற்றும் மகளை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X