நான் ஜாதி வெறி பிடித்தவனா? என்ன வச்சு பல கட்டுக்கதைகள்..ஆர்கே சுரேஷ் பேச்சு!

சென்னை: தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடுவெட்டி. இந்த படத்தை இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.கே.சுரேஷ், ஒன்றரை வருஷமா என்ன வச்சு வந்த பல கட்டுக்கதைகளை கேட்டு மனம் நொந்துவிட்டேன் என்றார்.

இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் பாமக கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த காடுவெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர் மோகன் ஜி, இயக்குநர் சோலை ஆறுமுகம் என பலர் கலந்து கொண்டுபேசினார்கள்.

Rk Suresh Speech at Kaduvetti Audio Launch event

ஆர்.கே.சுரேஷ் பேச்சு: இதில் பேசிய ஆர்.கே.சுரேஷ், ஒன்றரை வருடமாக என்னை பற்றி கற்பனையான கட்டுக்கதைகள் வந்து கொண்டே இருந்தன. ஒரு பக்கம் அதை பார்த்து நான் சிரித்தாலும், சில விஷயங்கள் என் மனதை மிகவும் புண்படுத்தின. இப்படித்தான் ஒன்றரை வருடம் போச்சு, இதனால் தான் நான் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. இதனால் நீங்க என் மீது கோவமாகக்கூட இருக்கலாம். நான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்த சினிமா துறையில் ஒரு தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், நடிகராகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு தெரியாத அரசியல்வாதிகளே இல்லை: என்னை பத்திரிகையாளர்கள் அனைவருக்குமே நன்றாக தெரியும். எனக்கு என்னுடைய கட்சி மட்டுமில்லாமல் பிற கட்சிகளிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் எல்லா தலைவர்களுடனும் எனக்கு பழக்கம் இருக்கிறது. எனக்கு தெரியாத அரசியல்வாதிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து கட்சியினரிடமும் அன்பா அண்ணன், தம்பி போல நான் பழகி இருக்கிறேன்.

ரசிகர்களுக்கு நன்றி: இந்த சினிமா துறையில் நான் அனுப்பிய ஒரு காசோலை திரும்பி இருக்கிறதா? என்னைப் பற்றி எங்கேனும் சொல்லப்பட்டு இருக்கிறதா? நான் எப்படி ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டு இருப்பேன். அதுவும் எனக்கு கிடைத்த அனுபவமாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். அதை சட்டத்தின் வழியில் சென்றேன். சட்டம் எனக்கு நல்ல தீர்ப்பை கொடுத்தது அதற்கு சட்டத்திற்கு மிகவும் நன்றி, கடவுளுக்கும் நன்றி. இந்த கஷ்டமான காலகட்டத்தில் என்னுடன் இருந்த ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜாதிபடம் இல்லை: காடுவெட்டி அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படம் ஜாதி படம் கிடையாது. இது இரண்டு தரப்பினருக்கான படம். என்னை பலரும் ஜாதி வெறி பிடித்தவன் என்று சொல்கிறார்கள். நான் எந்த ஜாதியையும் தவறாக பேசவில்லை. எல்லோருமே ஒன்றுதான் அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும் என்று ஆர்கே சுரேஷ் பேசி இருந்தார்.

இதில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, இந்த படத்தைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி. திரௌபதி மறுமலர்ச்சிக்குப் பிறகு, பெரிய வெற்றியடையப் போகும் படம் காடுவெட்டி. சினிமாத் துறை எங்களைப் போன்றோர்களை வரவேற்காது, எங்களைக் கொண்டாட இந்த கூட்டம் இருப்பதால்தான் நான் இங்கு இருக்கிறேன். பணக்கார பெண்களைக் குறிவைத்து காதலிப்பவரை முதலில் தட்டிக்கேட்டவர் காடுவெட்டி. அந்த பாணியில் இந்த படம் இருக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X