ஆணவக் கொலைகள் ஆதிக்க வர்க்கத்தால் தான் செய்யப்படுகிறதா?.. ஆர்.கே. சுரேஷ் திடீரென போட்ட ட்வீட்!
சென்னை: வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்.கே. சுரேஷ். தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வந்த அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த வாரம் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் காடுவெட்டி எனும் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
சாதிய படம் என நெட்டிசன்கள் காடுவெட்டி படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். தியேட்டரில் ஆர்.கே. சுரேஷ் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் டான்ஸ் ஆடியும் கொண்டாட்டத்தை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே. சுரேஷ் வெளியிட்ட ட்வீட் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஆர்.கே. சுரேஷ்.
காடுவெட்டி: சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள காடுவெட்டி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. காடுவெட்டி படத்தை ஆர்.கே. சுரேஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். சில மாவட்டங்களில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் படத்தை வெற்றிப்படமாக மாற்றியதற்கு நன்றி என ஆர்.கே. சுரேஷ் ட்வீட் போட்டுள்ளார்.
வசூல் எவ்வளவு?: மஞ்சள் ஸ்க்ரீன்ஸ் தயாரிப்பில் ஆர்.கே. சுரேஷ், விஷ்மயா, சங்கீர்த்தனா ஹீரோயின்களாக நடிக்க, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களை இசையமைத்துள்ள நிலையில், ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையை அமைத்துக் கொடுத்துள்ளார். சாதிய படம் என்கிற சாயம் பூசப்பட்ட நிலையில், படத்தை பெரிதாக பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரை அந்த படம் வசூல் செய்துள்ளதாகவும் சுமார் 3 முதல் 4 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆர்.கே. சுரேஷ் ட்வீட்: காடுவெட்டி குரு படத்திற்கு விமர்சகர் ஒருவர் அளித்த பேட்டி வீடியோவை ஷேர் செய்த ஆர்.கே. சுரேஷ், "ஆணவக்கொலைகள் ஆதிக்க வர்க்கத்தால் தான் செய்யப்படுகிறதா ? 'காடுவெட்டி' என்கிற கேள்வியையும் ட்விட்டரில் எழுப்பியிருக்கிறார் ஆர்.கே. சுரேஷ். அவரது போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குவிந்து வருகின்றன. முதலில் ஆதிக்க சாதி என்ற ஒன்றே கிடையாது என்றும் எந்த சாதியினரும் மதத்தினரும் ஆணவக் கொலையை செய்யக் கூடாது அது சட்டப்படி குற்றம் என நெட்டிசன்கள் சாட்டையடி பதிவுகளை போட்டு வருகின்றனர். இந்த படம் பெரிதாக வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்திக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











