Don't Miss!
- News
பட்டாக்கத்தி..பாட்டில் வீச்சு..பட்டப்பகலில் கல்லூரி மாணவர்கள் மோதல்..பதறிய மெரீனா..4 பேர் கைது
- Finance
இந்தியாவின் முதல் பட்ஜெட்..? நிர்மலா சீதாராமன் பட்ஜெட் சாதனை..! #Budget2023
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் ஆர்.கே.சுரேஷ் மனைவியின் வளைகாப்பு..யார் யார் வந்தாங்க தெரியுமா?
சென்னை : பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் மனைவி மது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு தடபுடலாக வளைகாப்பு செய்து அழகு பார்த்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்.
ஆர்.கே.சுரேஷ் 2012ம்ஆண்டு சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தை விநியோகம் செய்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின், சலீம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார்.
இதையடுத்து, பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் மிரட்டலான வில்லனாக என்ட்ரி கொடுத்து அப்லாஸ்களை அள்ளினார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
ஆயிஷா.. ஜனனி.. தனா.. என்ன பெண் போட்டியாளரா வெளியேத்துறாங்க.. பிக் பாஸில் எதிரொலிக்கிறதா ஆணாதிக்கம்?

நடிகர் ஆர்கே சுரேஷ்
நடிகர் ஆர்கே சுரேஷ். மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மருது படத்தில் மிரட்டல் வில்லனாக அலற விட்டிருப்பார் ஆர்கே சுரேஷ். அதேபோல் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் சமுத்திரக்கனிக்கு பாசக்கார நண்பனாகவும் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஆர் கே சுரேஷ்.

பைனான்சியருடன் திருமணம்
கடந்த 2017-ம் ஆண்டு சுரேஷுக்கு சீரியல் நடிகை திவ்யாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர். இதனால், இவர்களின் திருமணம் நடைபெறாமல் நின்றுபோனது. இதையடுத்து, கடந்த ஆண்டு 2020ம் ஆண்டு சினிமா பைனான்சியரை திருமணம் செய்துகொண்டார். கொரோனா நேரத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றதால், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

இரண்டாவது வளைகாப்பு
இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்கே சுரேஷ் மது தம்பதிக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. முதல் வளைகாப்பு நிகழ்ச்சியை தடபுடலாக நடத்திய சுரேஷ், இரண்டாம் வளைகாப்பு விழாவையும் தடபுடலாக நடத்தி உள்ளார்.

வளைகாப்பு போட்டோஸ்
சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ஷங்கரின் மனைவி ஈஸ்வரி, நடிகர் கௌதம் கார்த்திக் இயக்குநர், நடிகர் விமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணசாமி, அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்கே சுரேஷ் மற்றும் அவரது மனைவி மதுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த வளைகாப்பு போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.