RK X KH: ரஜினி - கமல் படத்தின் ப்ரோமோ சூட்டில் நடந்த சுவாரஸ்யம்.. இதுக்குப் பின்னாடி இவ்வளவு இருக்கா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தை நெல்சன் இயக்குகிறார். ரெட் ஜெயின்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்று ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இப்படி இருக்கையில் இந்த படத்தின் ப்ரோமோ குறித்து ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் கதையை என்னிடத்தில் நெல்சன் வந்து கூறினார். கதை மிகவும் சிறப்பாக இருந்தது. அதில் ஒரு டிஜிபி கதாபாத்திரம் மற்றும் ஒரு கமிஷ்னர் கதாபாத்திரம் என இரண்டு வலுவான கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதையைச் சொல்லி முடித்ததும், இந்த படத்திற்கு என்னை ஒளிப்பதிவாளராக பணியாற்ற முடியுமா என்று கேட்டார். நான் உடனே சரி என்று கூறினேன், காரணம் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

RK x KH Promo Secrets Revealed Rajinikanth amp amp Kamal Haasan s Shoot Took Over 20 Takes

20 டேக்குகள்: அதன் பின்னர் ஒரு வார காலத்திற்குள் படத்திற்கான ப்ரோமோவை உருவாக்க வேண்டும் என்று கூறினார். ஒரு நான்கு நாட்களுக்குள் செட் ரெடியாகிவிட்டது. மும்பை, ஹைதராபாத், டெல்லி என பல இடங்களில் இருந்து மாடல்கள் வந்தார்கள். எல்லாமே சிறப்பாக சென்று கொண்டு இருந்தது. ஆனால், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என இருவரும் ஒருசேர நடந்து வருவதை படமாக்குவது என்பது எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. அதுவும் குறிப்பாக, இருவரையும் ஒரே வேகத்தில் நடக்க வைத்து, அதை படமாக்குவது சவாலாக இருந்தாலும், இருவரும் நடிப்பது மிருகத்தனமாக இருந்தது, பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. இதற்கு மட்டும் 20 டேக்குகளுக்கு மேல் சென்றுவிட்டது. அதன் பின்னர் கமல் மற்றும் ரஜினி என இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து நடித்தார்கள்.

RK x KH Promo Secrets Revealed Rajinikanth amp amp Kamal Haasan s Shoot Took Over 20 Takes

நெல்சன்: இதில் மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நெல்சன் மற்றும் அனிருத் என இருவரும் அதிக டேக்குகள் வாங்கினார்கள். ஆனாலும் அவை ரசிக்கும்படியாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார். இவர் தெரிவித்துள்ள இந்த தகவல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த ப்ரோமோவுக்கு பின்னர் இப்படி ஒரு சுவாரஸ்யமா என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X