நெய் வாங்கலையோ நெய்.. தீபாவளி நெருங்க நெருங்க.. இன்னும் என்னவெல்லாம் விளம்பரம் வரப் போகுதோ?

சென்னை: உதய கிருஷ்ணா நெய் விளம்பரத்தில் நடித்த சோமசேகர் உள்பட, அனைத்து பிக் பாஸ் போட்டியாளர்களையும் ஆர்.கே.ஜி நெய் விளம்பரத்தில் நடிக்க வைத்து விட்டனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தொடர்ந்து பிரிஸ்மா, டிரெண்ட்ஸ், ஆர்.கே.ஜி நெய் என ஏகப்பட்ட விளம்பரங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளேயும் விளம்பரங்களாக போட்டு டார்ச்சர் பண்றாங்களே என ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி வருகின்றனர்.

சுரேஷ் தாத்தாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, எதிலுமே ஈடுபாடு காட்டாமல் மனம் உடைந்து போனதாலும், நேற்றைய நிகழ்ச்சி களைகட்டவில்லை.

விளம்பர நிகழ்ச்சியான பிக் பாஸ்

விளம்பர நிகழ்ச்சியான பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இடையே ஏகப்பட்ட விளம்பரங்களை போட்டு ரசிகர்களை சாகடிக்கிறாங்கன்னு பார்த்தா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளேயும் வரிசையா விளம்பரங்களை போட்டு டார்ச்சர் பண்ணி வருகின்றனர் என பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகார்களை அடுக்கி வருகின்றனர்.

ஆர்.கே.ஜி நெய்

ஆர்.கே.ஜி நெய்

தீபாவளி நெருங்க நெருங்க பிக் பாஸ் நிகழ்ச்சியை விளம்பரதாரர்கள் நல்லாவே பயன்படுத்திக் கொள்கின்றனர். நேற்றைய எபிசோடில், ஆர்.கே.ஜி நெய் சார்பாக வெண் பொங்கல், ரவை கேசரி செய்யும் போட்டி நடைபெற்றது. ஹவுஸ்மேட்கள் இரு அணிகளாக பிரிந்து, போட்டிப் போட்டு சமைத்தனர். கிடைக்கிற ஸ்பேஸில் எல்லாம் ஆர்.கே.ஜி. நெய்யை ஹைலைட் பண்ணினார்கள்.

மாறிய ஜோடி

மாறிய ஜோடி

விஜயதசமி பண்டிகையின் போது நடந்த சமையல் போட்டியில் ஜோடிகளாக இருந்தவர்கள் நேற்றைய போட்டியில் மாறி விட்டனர். அர்ச்சனாவும் நிஷாவும் புதுசா ஜோடி போட்டு வெண் பொங்கல் செய்தனர். அத்துணூண்டு வெண் பொங்கல் செய்ய, இத்தனை பேர் ஹெல்ப்பா என்றும் ரசிகர்கள் விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர். இவங்களாம் 16 பேருக்கு தினமும் சோறு ஆக்கி போடுறாங்களாம்.. நம்புங்க பாஸ்!

சனம், அனிதா

சனம், அனிதா

சனம் ஷெட்டி கூட சண்டை போட்டதால், பாலா இந்த முறை சனம் ஷெட்டி கூட சேர்ந்து சமைக்கவில்லை. அனிதாவுக்கும் சனம்க்கும் நல்ல புரிதல் இருப்பதால், அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ரவை கேசரி செய்து அசத்தினர். அவங்களுக்கு ஒரு டீம் ஹெல்ப் பண்ண காட்சிகள் எல்லாமே ரொம்ப போரிங்காத்தான் போச்சு.

சோகமான சுரேஷ் தாத்தா

சோகமான சுரேஷ் தாத்தா

நேற்றைய எபிசோடு களைகட்டாமல் இருந்ததற்கு முக்கிய காரணமே சுரேஷ் தாத்தா தான். தண்ணி ஊத்தி சாப்பிட்டதில் தொடங்கி, அர்ச்சனா பேசிய பேச்சுக்களை வேற மாறி ரியாக்‌ஷன் உடன் சோகமாக மாறி கவனித்தது, சமையல் டாஸ்க்கில் பங்கெடுக்காதது என கேபி கேஸுக்கு அப்புறம் மனுஷன் ரொம்பவே மாறிட்டார்.

சம்யுக்தாவின் பயாஸ்டு தீர்ப்பு

சம்யுக்தாவின் பயாஸ்டு தீர்ப்பு

காலையில செஞ்சு ஆரிப் போன வெண் பொங்கலையும், அப்புறம் செஞ்ச ரவை கேசரியையும் டேஸ்ட் பண்ணி தீர்ப்பு சொல்ல, பிக் பாஸ் தலைவரான சம்யுக்தாவுக்கு பொறுப்பு கொடுக்கும் போதே, பயாஸ்டான தீர்ப்பு தான் வரும் என தெரிந்தது. அதே போலவே சம்யுக்தாவுக்கு பிடிக்காத சனம் ஷெட்டிக்கு எதிராக அர்ச்சனாவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X