ஜனவரியில் கட்சி தொடங்க திட்டம்? ரஜினிகாந்தே முதல்வர் வேட்பாளர்.. நிர்வாகிகள் வலியுறுத்தல்!
சென்னை: அரசியல் கட்சித் தொடங்கினால், ரஜினியே முதல்வர் வேட்பாளார் என்று மன்ற நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அறிக்கைக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்ற ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என்றார்.

அரசியல் நிலைப்பாடு
இதனால், அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா, மாட்டாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

சாதக பாதகங்கள்
அதன்படி, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் 38 மாவட்டங்களை சேர்ந்த 52 நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களிடம் ஆலோசனையை தொடங்கி உள்ளார். அரசியல் கட்சி தொடங்கினால் ஏற்படும் சாதக பாதகங்களை பற்றி அவர் ஆலோசித்து வருகிறார்.

ஆரம்பிக்க வேண்டும்
அரசியல் கட்சி தொடங்குவது பற்றி தங்கள் கருத்துக்களை சுருக்கமாக அவர்களிடம் கேட்டுள்ளார் ரஜினி. அவர்கள், கண்டிப்பாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று ரஜினியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கட்சி தொடங்கினால், ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அறிவிக்க இருக்கிறார்
இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் அவர் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் அதை அவரே அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் அவர் அறிக்கை மூலம் தனது அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை அறிவிக்க இருக்கிறார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











