ஏங்க அந்தப் பாட்டு எனக்குதான் பிடிக்கும்.. ரெய்னாவுக்கு இல்லை.. ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஓபனாக சொன்ன எம்.எஸ்.தோனி
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 28ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கின்றன. இந்த முறை யார் கோப்பையை வெல்வார் என்ற கேள்வியும்; கடந்த சீசனில் பத்தாவது இடத்தை பிடித்த சிஎஸ்கே இந்த முறை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற கேள்வியும் உருவாகியிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி சார்பில் Roar 26 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
இந்தியாவில் 90 விழுக்காட்டினரால் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவிருக்கின்றன. கடந்த முறை கோப்பையை முதல்முறையாக வென்ற ஆர்சிபி இந்த முறை வெற்றியோடு இந்தத் தொடரை தொடங்குமா என்ற ஆவல் அதிகரித்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மார்ச் 30ஆம் தேதி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Roar 26: சூழல் இப்படி இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் Roar 26 என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் சென்னை அணியின் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் கலந்துகொண்டார். அவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டியும் நடத்தப்பட்டது. இந்த முறை சென்னை அணிக்காக சஞ்சு சாம்சன் களமிறங்குகிறார். எனவே அவருக்கு நினைவு கேடயம் ஒன்றையும் தோனி வழங்கினார். இவர்கள் தவிர்த்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
ரஹ்மானின் இசை கச்சேரி: ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு மினி இசை கச்சேரியை நடத்தினார். சங்கமம் படத்தில் இடம்பெற்ற, 'வராக நதி கரையோரம்' பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளுக்கு பதிலாக, 'சிஎஸ்கே ஜொலிக்குது பாரு.. மஞ்சள் ஜெர்சியை போடு.. அடங்காத சிங்கத்தை பாரு.. எதிர்த்து நின்னு ஜெயிப்பது யாரு?' என்ற வரிகளை வைத்து பாடினார். அதுமட்டுமின்றி தோனிக்கு, 'நீ சிங்கம்தான்' பாடலையும், ருதுராஜ் கெய்க்வாட்டிடம், எங்கள் ஊரில் ஒரு கெய்க்வாட் இருக்கிறார் (ரஜினிகாந்த்) என சொல்லி, படையப்பா பட தீம் இசையையும் டெடிகேட் செய்தார்.
தோனி சொன்னது: மேலும் சுரேஷ் ரெய்னாவை பார்த்து சின்ன தல இது உங்களுக்கு பிடித்த பாட்டு என சொல்லி முன்பே வா என் அன்பே வா பாடலை டெடிகேட் செய்தார். ரஹ்மானின் இந்த செயல் மைதானத்தில் இருப்பவர்களை ஆர்ப்பரிக்க செய்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு ரஹ்மானும், தோனியும் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். அந்த சமயத்தில், முன்பே வா பாடல் எனக்குதான் பிடிக்கும். ரெய்னாவுக்கு இல்லை என தோனி சிரித்துக்கொண்டே கூறினார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ஏற்கனவே டெடிகேட்: முன்னதாக, ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு ஏ.ஆர். ரஹ்மான், லஹான் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சாலே சாலோ பாடலை தோனிக்கு அர்ப்பணித்திருந்தார். அதுமட்டுமின்றி சுரேஷ் ரெய்னாவுக்கும், ரங்கீலா படத்தில் இடம்பெற்றிருக்கும் மாங்க்தா ஹை க்யா என்ற பாடலை டெடிகேட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியை பொறுத்தவரை ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிரமான ரசிகரும்கூட. எக்கச்சக்க பாடல்களை அவர் தனது ப்ளே லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications















