"ரோர் ஆஃப் ஆர்ஆர்ஆர்".. செல்லங்களா பார்க்க ரெடியா.. மேக்கிங் வீடியோவை வெளியிடும் ராஜமௌலி!

ஹைதராபாத் : பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ராஜமௌலி இப்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தடைபட்டு இப்பொழுது மீண்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இறுதியாக உள்ள இரண்டு பாடல்களை எடுக்க ஆர்ஆர்ஆர் படக்குழு வெளிநாடு செல்ல உள்ள நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் ராஜமௌலி வெளியிட திட்டமிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலக அளவில்

உலக அளவில்

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் இவரை உலக அளவில் மிகவும் பிரபலமாக்கி உள்ளது. பிரபாஸ் நடிப்பில் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் ,ரம்யா கிருஷ்ணன்,ராணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்த திரைப்படம் முறியடிக்க முடியாத மிகப்பெரிய வசூலை செய்து சாதனை படைத்தது.

400 கோடி

400 கோடி

இப்பொழுது பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு எஸ்எஸ் ராஜமௌலி ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்து வருகின்றனர். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என 5 மொழிகளில் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹீரோயினியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார். வில்லனாக அஜய் தேவ்கான் நடிக்க உள்ளார்.

இரண்டு பாடல்கள்

இரண்டு பாடல்கள்

ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு இப்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நேரம் திரையரங்களில் கொண்டாடப்பட்டு இருக்க வேண்டிய திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு தடைபட்டு இப்பொழுது மீண்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இறுதியாக இரண்டு பாடல்கள் மட்டும் மீதமிருக்க அதற்காக வெளிநாட்டுக்கு செல்ல படக்குழு தயாராகிக் கொண்டுள்ளது.

Recommended Video

முதல் முறையாக வரலாற்று படம் எடுக்கும் சங்கர் | Ram Charan Pan India Movie
ஜூலை 15

ஜூலை 15

ஆர்ஆர்ஆர் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு எதிர்பார்ப்புகளை எகிற செய்திருக்கும் நிலையில் இப்பொழுது படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூலை 15ஆம் தேதி காலை 11 மணிக்கு இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட உள்ளதாக போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். அந்த போஸ்டரில் "ரோர் ஆஃப் ஆர்ஆர்ஆர்" என குறிப்பிடப்பட்டுள்ளது . ஆர்ஆர்ஆர் கர்ஜனையை வரும் ஜூலை 15ஆம் தேதி காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X