மும்பையில் பிரம்மாண்டமாக கர்ஜிக்கும் ராஜமெளலியின் இரத்தம் ரணம் ரெளத்திரம்.. களைகட்டும் புரமோஷன்!

மும்பை: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தின் பிரம்மாண்ட புரமோஷன் மும்பையில் களைகட்டி உள்ளது.

Recommended Video

கொஞ்சும் தமிழில் பேசிய Alia Bhatt & Jr.NTR | Alia Bhatt Speech in RRR promotion

வரும் ஜனவரி 7ம் தேதி உலகளவில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் புரட்சி செய்ய காத்திருக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பான் இந்திய படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

மும்பையில் புரமோஷன்

மும்பையில் புரமோஷன்

பாகுபலி படம் மூலம் பாலிவுட் நடிகர்களுக்கு பாக்ஸ் ஆபிசில் பங்கம் விளைவித்த இயக்குநர் ராஜமெளலி மீண்டும் அதே போல ஒரு பாக்ஸ் ஆபிஸ் புரட்சியை செய்ய மும்பையில் முகாமிட்டுள்ளார். இந்த முறை அஜய் தேவ்கன், ஆலியா பட் என பாலிவுட் நடிகர்களையும் இணைத்துக் கொண்டு ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகி உள்ள நிலையில், அதற்கான பிரம்மாண்ட புரமோஷன் தற்போது நடைபெற்று வருகிறது.

ராமும் பீமும்

ராமும் பீமும்

மும்பையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் செம ஸ்வாகாக போஸ் கொடுத்துள்ள போட்டோவையும் படக்குழு வெளியிட்டு வைரலாக்கி உள்ளது. இந்த இருவரின் அசத்தலான பர்ஃபார்மன்ஸை திரையில் காண ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது.

மாஸ் கட் அவுட்

மாஸ் கட் அவுட்

ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்குமே மும்பை ரசிகர்கள் மாஸ் கட் அவுட் வைத்து நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அலங்கரித்துள்ள புகைப்படங்களும் ரசிகர்கள் இரண்டு ஹீரோக்களையும் காண காத்திருக்கும் காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

டெரிஃபிக் ஜக்கன்னா

டெரிஃபிக் ஜக்கன்னா

இயக்குநர் ராஜமெளலியை தெலுங்கு சினிமா ரசிகர்கள் ஜக்கன்னா என அன்போடு அழைக்கின்றனர். ஆர்.ஆர்.ஆர் பட புரமோஷனுக்காக மும்பையில் முகாமிட்டுள்ள இயக்குநர் ராஜமெளலி செட் போடும் பணிகளையும் ஆய்வு செய்யும் காட்சிகள் தீயாய் பரவி வருகின்றன.

ரசிகர்களுடன் செல்ஃபி

ரசிகர்களுடன் செல்ஃபி

ஜூனியர் என்டிஆர் மற்றும் ஹீரோயின் ஆலியா பட் இருவரும் இந்த புரமோஷனுக்காக மும்பை வந்து இறங்கிய நிலையில், விமான நிலையத்திலேயே ரசிகர்களுடன் இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சி எந்தவொரு தொலைக்காட்சியிலும் லைவ் செய்யப்படவில்லை. வரும் கிறிஸ்துமஸ்க்கு சிறப்பு ஒளிபரப்பாக இது ஒளிபரப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X