twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் திருமலை வீட்டில் பெண்ணை கட்டிப் போட்டு நகை கொள்ளை!

    By Shankar
    |

    Director Thirumalai
    சென்னை: சென்னையில் நேற்று பட்டப்பகலில் சினிமா இயக்குநர் திருமலை வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து அவரது உறவுக்காரப் பெண்ணை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

    தி நகர், அகம்புறம் போன்ற படங்களை இயக்கியவர் திருமலை. தற்போது காசே தான் கடவுளடா என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் அந்த படம் வெளிவர உள்ளது.

    திருமலைக்கு நேற்று திருமண நாள். இதையொட்டி அவர் தனது மனைவி நதியா மற்றும் குழந்தையோடு ஏலகிரிக்குப் போய் விட்டார். அங்கு அவர் தனது திருமண நாளை கொண்டாடினார். சென்னையில் அவரது வீட்டில் அவரது அக்கா மகள் பூர்ணிமா தனியாக இருந்தார்.

    'கரண்ட்' போன நேரத்தில் புகுந்த களவாணிகள்

    நேற்று பிற்பகல் 2 மணியளவில் சாலிக்கிராமம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. திருமலை வீட்டிலும் மின்சாரம் இல்லை. இதனால் அவரது அக்கா மகள் பூர்ணிமா காற்றுக்காக கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வாசலில் இருந்து உள்ளார்.

    அப்போது மர்ம ஆசாமிகள் இருவர் திடீரென்று வீட்டுக்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி பூர்ணிமாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். சத்தம் போடக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். பின்னர் அவரது வாயில் துணியை திணித்து சமையல் அறைக்குள் அவரை தள்ளி கை கால்களை கட்டிப்போட்டு உள்ளனர். பின்னர் சமையல் அறை கதவை பூட்டியிருக்கிறார்கள். சமையல் அறை முழுவதும் சமையல் கியாசையும் திறந்து விட்டு உள்ளனர். சத்தம் போட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவோம் என்றும் பயமுறுத்தியுள்ளனர்.

    பின்னர் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு மர்ம ஆசாமிகள் இருவரும் தப்பி ஓடி விட்டனர். மாலை 4 மணியளவில் டைரக்டர் திருமலையின் உறவினர் பாஸ்கரன் தற்செயலாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தான் கொள்ளை நடந்த விஷயம் தெரிந்தது. பூர்ணிமாவின் கை, கால் கட்டுகளை அவர் அவிழ்த்து விட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார். இணை போலீஸ் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் சம்பவ நடந்த வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து இயக்குநர் திருமலைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் நேற்றிரவு ஏலகிரி மலையில் இருந்து வீடு திரும்பினார். 25 சவரன் நகை வரை கொள்ளை போய் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ளனர்.

    'நல்லவேளை, கொஞ்சமாத்தான் திருடு போயிருக்கு'

    கொள்ளை சம்பவம் குறித்து இயக்குநர் திருமலை கூறுகையில், "திருட வந்தவர்கள் இரண்டுபேர். தமிழில்தான் பேசி இருக்காங்க. நல்ல வேளையாக வீட்டில் பெரிய அளவில் நகைகள் எதுவும் வைக்கவில்லை. வங்கி லாக்கரில் நகைகளை வைத்துள்ளேன். வீட்டில் கொஞ்சமாத்தான் வைத்திருந்தோம். அந்த நகைகளைத்தான் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று உள்ளனர்.

    எங்கள் வீடு உள்ள பகுதிகளில் அடிக்கடி இது போல் கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

    English summary
    Two unidentified men entered director Thirumalai's Chennai house and robbed 25 sovereigns of jewels on Thursday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X